சரியானகூற்றைத் தேர்ந்தெடுக்க.
அ) தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம் ‘ஆலம் ஆரா‘
ஆ) சென்னையில் முதல் திரைப்படக் கல்லூரி கோடம்பாக்கத்தில்
தொடங்கப்பட்டது.
இ) நல்லதம்பி திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர் மு.கருணாநிதி.
ஈ) முதல் முழு நீள வண்ணப்படம் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்‘
Answers
Answered by
0
சரியானகூற்று - முதல் முழு நீள வண்ணப்படம் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்‘
- 1926ல் வெளிவந்த ‘தி ஜாஸ் சிங்கர்‘ என்பது உலகின் முதல் பேசும்படம் ஆகும்.
- அதுபோல் 1931ல் இந்தியாவின் முதல் பேசும் படம் ஆன ஆலம் ஆரா வெளிவந்தது.
- எச்.எம். ரெட்டி இயக்கிய வெளிவந்த காளிதாஸ் என்ற படமே தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம் ஆகும். சென்னையில் முதல் திரைப்படக் கல்லூரி அடையாறில் தொடங்கப்பட்டது.
- நல்லதம்பி திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதியவர் அறிஞர் அண்ணா ஆகும். மந்திர குமாரி, பராசக்தி போன்ற திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதியவர் மு.கருணாநிதி ஆகும்.
- தமிழில் வெளிவந்த முதல் முழு நீள வண்ணப்படம் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்‘ ஆகும். முதல் முழு நீள வண்ணப்படம் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்‘ சரியான கூற்றாகும்.
Similar questions