படப்பிடிப்பு நகர்விற்கு உதவும் கருவிகள் யாவை?
Answers
Answered by
2
Answer:
திரைப்படம் எடுக்கப் பயன்படும் படச்சுருள், செலுலாய்டு எனும் பொருளால் ஆனது. படம் எடுக்கப் பயன்படும் சுருளானது எதிர்ச்சுருள் ஆகும். தனித்தனிப் படச்சுருள்களில் ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள் எடுக்கப்படும்.
Explanation:
படம்பிடிக்கும் கருவி
திரைப்படத்தில் ஒளிப்பதிவு செய்யும் கருவிக்குப் படம்பிடிக்கும் கருவி என்று பெயர். இக்கருவியில் ஓரடி நீளமுள்ள படச்சுருளில் 16 படங்கள் வீதம் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ச்சியாகப் படம்பிடிக்கப்படும்.
ஒலிப்பதிவு
திரைப்படத்துக்கான பாடல்கள் மற்றும் உரையாடல்களில் எழும் ஒலியலைகளை நுண்ணொலிப் பெருக்கியானது மின் அதிர்வுகளாக்கும். இவை பெருக்கப்பட்டு ஒளியாக்கப்படுகின்றன. இவ்வொளி படச்சுருளின் விளிம்புப் பகுதியில் படிந்து ஒலிப்பாதையாகக் காணப்பெறும்.
Answered by
3
படப்பிடிப்பு நகர்விற்கு உதவும் கருவிகள் :
- படப்பிடிப்பு கருவிகளை தோளில் சுமந்துக் கொண்டே நகர்த்த இயலும்.
- ஆனால் கனமான அல்லது விலை உயர்ந்த படப்பிடிப்பு கருவியினை தோளில் சுமந்து நகர்த்தும் போது அது தவறி கீழே விழுந்து விடவும், அல்லது படப்பிடிப்பு அசைந்தும் ஆடியுமாறு பதிவாகவும் வாய்ப்புகள் அதிகம்.
- அதற்காகவே படப்பிடிப்பு நகர்விற்கு உதவும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
- அவை, உருளைகள் பொருத்தப்பட்ட முக்காலி, நகர்த்தி, தூக்கிச் சுழற்றி மற்றும் வாகனங்கள் (ஹெலிகாப்டர், கார் போன்றவை) முதலியன ஆகும்.
- இயக்குநர் எந்தக் கோணத்தில் படத்தின் ஒரு காட்சியினை படம் பிடிக்க எண்ணுகிறரோ, அதற்கு ஏற்ற படப்பிடிப்பு நகர்விற்கு உதவும் கருவியினை பயன்படுத்தலாம்.
Similar questions