பாடல்சார் கலைகள் என்றால் என்ன
Answers
Answered by
1
பாடல்சார் கலைகள் :
- நாட்டார் அரங்கு கலைகளை சடங்குசார் கலைகள், பாடல்சார் கலைகள், கருவிசார் கலைகள் என மூன்று வகையாக பிரிப்பர்.
- நாட்டார் அரங்கு கலைகளில் பாடலுக்கு முக்கியத்துவம் அளித்து நிகழ்த்தப்படும் கலைகள் பாடல்சார் கலைகள் எனப்படும்.
- இக்கலையில் பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடப்படுகிறது. இலாவணி, உடுக்கைப் பாட்டு, பகல் வேடம், ராஜா ராணி ஆட்டம் போன்றவை பாடலுக்கு முக்கியத்துவம் அளித்து நிகழ்த்தப்படும் பாடல்சார் கலைகளுக்கு எடுத்துக் காட்டு ஆகும்.
- உடுக்கைப்பாட்டு என்பது உடுக்கை என்னும் இசை கருவியினை அடித்து பாடல் பாடும் கலை ஆகும்.
- இசைக்கருவியின் பெயரால் அமைந்து இருந்தாலும் இக்கலைக்கு பாடலே முக்கியமாக உள்ளது.
- இக்கலை நிகழ்ச்சியில் ஒருவர் உடுக்கை அடிக்க, ஒரு பெண்ணோ அல்லது பெண் வேடமிட்ட ஒரு ஆணோ கதைப் பாடலை பாடி ஆடுவர்.
Similar questions