சொற்பொருள் மாற்றத்திற்கு அடிப்படையாக அமையும் காரணிகள் யாவை?
Answers
Answered by
0
சொற்பொருள் மாற்றத்திற்கு அடிப்படையாக அமையும் காரணிகள் :
- பொருளினை உணர்த்தும் கருவியாக சொற்கள் உள்ளன. அவை பொருளினை குறிப்பாகவும், வெளிப்படையாகவும் உணர்த்தும்.
- வெளிப்படையாக பொருளினை உணர்த்தும் சொற்கள் பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த சொற்களாவே இருக்கும்.
- குறிப்பால் பொருளினை உணர்த்தும் சொற்கள் பெரும்பாலும் சூழலுக்கு ஏற்ப மாறும் நுட்பமான சொற்களாவே இருக்கும்.
- அவ்வாறு குறிப்பால் பொருள் உணர்த்துபவைகளில் சில ஆகுபெயர், அன்மொழித்தொகை, சிலேடை, உருவகம், மங்கலம், இடக்கரக்கடங்கல், குழுஉக்குறி முதலியன ஆகும்.
- சொற்பொருள் மாற்றத்திற்கு அடிப்படையாக அமையும் காரணிகள் சமுதாயம், பண்பாடு, பேசுபவரின் உணர்வு, மனநிலை, உலகியல் சூழல், சூழலில் ஏற்படும் நிகழ்வுகள் முதலியன ஆகும்.
- இது மட்டுமின்றி பிற மொழித் தாக்கமும் காரணமாக அமையும்.
Similar questions