கணினி மொழியியலின் முக்கியப் பங்கு என்ன?
Answers
Answered by
0
மொழியினை அறிவியல் நோக்கில் ஆராய்வதற்கு அல்லது மொழிகள் பற்றிய அறிவியல் ஆய்வு படிப்பிற்கு மொழியியல் என்று பெயர். மொழியினை மனித மூளைப் பயன்படுத்தும் நுட்பத்தினை கணினிக்கு தந்து, அதன் மூலம் மொழி நுட்பக் கருவிகளை உருவாக்க இயலும்.
கணினி மொழியியல்
- கணினி மொழியியல் என்பது மொழியியல் மற்றும் கணினி தொழில் நுட்பம் ஆகியவை இணைந்த செயல்பாடு ஆகும். கணினி மொழியியலின் முக்கிய பங்கு இயற்கை மொழிக்கூறுகளை செயற்கையாக கணினிக்கு தகுந்தவாறு மாற்றி தருவதற்கான கோட்பாடுகள் மற்றும் செயல்பாடுகளை தருவது ஆகும். மொழி ஆய்வு ஆனது கணினி மொழியியலில் உருபனியல் நிலை, ஒலியனியல் நிலை, தொடரியல் நிலை மற்றும் பொருண்மையியல் நிலை ஆகிய நான்கு நிலைகளில் நடைபெறுகிறது.
Similar questions
Biology,
5 months ago
Social Sciences,
5 months ago
Social Sciences,
5 months ago
Biology,
11 months ago
Biology,
11 months ago
Math,
1 year ago