Biology, asked by AnimeshMandal3853, 8 months ago

இரத்த வகையை எவ்வாறு வரையறுப்பாய்?

Answers

Answered by omsamarth4315
0

Answer:

hloooo

pls write in a common language.

Answered by anjalin
0

இரத்த வகை எனப்படுவது இரத்தத்தில் இல்லாத அல்லது உள்ள இரத்த சிவப்பணுக்கள் மற்றும் ஆன்டிபாடிகளின் மேற்பரப்பில் அமைந்துள்ள மரபு வழி பெறப்பட்ட ஆண்டிஜென்கள் மூலமாக இரத்தத்தை வகைப் படுத்துவது ஆகும்.

விளக்கம்:

இரத்த வகையை பொறுத்து இந்த ஆன்டிஜென்கள் கார்போஹைட்ரடாகவோ, புரதமாகவோ, கிளைக்கோ லிபிடாகவோ அல்லது கிளைக்கோ புரதமாகவோ இருக்கலாம்.  

ABO அமைப்பு

பல்வேறு வகையான ஆண்டிஜென்களை மனித இரத்த சிவப்பு அணுக்கள் கொண்டுள்ளன. இவை Agglutinogens (ஒட்டி உறை தலாக்கப்படும் காரணி) என்று அழைக்கப்படுகின்றன. ஆண்டிஜென்கள் A மற்றும் B, நன்கு தெரிந்த மற்றும் மிகவும் முக்கியமானவை ஆகும். இரத்த சிவப்பணுக்களில் உள்ள A மற்றும் B ஆண்டிஜென்களுக்கா ன ஆண்டிபாடிகள் Agglutins (ஒட்டி உறையும் காரணி) எனப்படும்.

  • A இரத்த வகையை சார்ந்த மக்கள், அவர்கள் இரத்தத்தில் B-ஆண்டிபாடியையும் A-ஆண்டிஜனையும் பெற்றுள்ளனர்.  
  • B இரத்த வகையை சார்ந்த மக்கள், பிளாஸ்மாவில் A-ஆண்டிபாடியையும் B-ஆண்டிஜனையும் கொண்டுள்ளன.
  • O இரத்த வகையை சார்ந்த மக்கள், ஆண்டிஜென்களை பெற்று இல்லை.

Similar questions