இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது ?
Answers
Explanation:
காற்றாலை (windmill) என்பது, காற்றால் உந்தப்படும், ஆற்றல் உற்பத்தி செய்யும் பொறி ஆகும். காற்று வீச்சினால் ஏற்படக்கூடிய ஆற்றலைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் பொறி அமைக்கப்பட்டு, காற்று விசைச் சுற்றுக் கலன்களில் இருந்து பெறப்படும் இயந்திர ஆற்றல், மின் ஆற்றலாக மாற்றப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. இதில் இருக்கும் நீளமான தகடுகள்/இறக்கைகள் (Blades) காற்றின் வேகத்தால் சுற்றுவதால், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் மின்னாக்கி (Generator) இயங்குவதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. புதுப்பிக்கக்கூடிய ஆற்றலான காற்றாலை மின்சாரம், சுற்றுச்சூழலை சீரழிக்காத பசுமை ஆற்றலாகக் கருதப்படுகிறது. இந்த வகையில் செய்யப்படும் ஆற்றல் உற்பத்தி சுற்றுச்சூழலைப் பாதிக்காத தூய ஆற்றல் ஆகும். உதாரணமாக, அனல்மின் நிலையங்களின் மூலம் வெளியேற்றப்படும் காற்று மாசுபாடு போன்ற பாதிப்புகள் எதுவும் காற்றாலைகளால் ஏற்படுவதில்லை. பொதுவாக, இது கம்பங்கள் முதலிய பெரிய, உயர்ந்த கட்டிடங்களில் இருக்கும். பழங்காலத்தில், காற்றாலைகளின் ஆற்றல் தானியங்களை அரைக்கவும், நீர் இறைக்கவும், மர அறுவைக்கும் பயன்பட்டது. தற்காலத்தில், இவை மின் உற்பத்திக்கே அதிகம் பயன்படுவதால் காற்றுச் சுழலிகள் (wind turbines) என்றும் அழைக்கப்டுகின்றன.
இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்:
- காற்றாலையின் மூலமாக அதன் உதவியோடு மின் உற்பத்தி நடைபெறுகின்ற பணியில் ஐந்தாவது இடத்தில் உள்ள நாடு நம் இந்திய நாடு.
- அந்த இந்தியாவிலும் அதிக அளவு காற்றாலையின் மூலமாக மின் உற்பத்தி செய்யக்கூடிய மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றுள்ளது.
- காரணம் மொத்த இந்தியாவில் 55 சதவிகித பங்குகளை தமிழகம் பெற்று இருப்பதன் காரணமாக முதலிடத்தை பெற்றுள்ளது.
- இங்கு தமிழ் நாட்டுக்கு தேவையான மின் உற்பத்தியில் 20 சதவிகிதம் இங்கிருந்து கிடைக்கப் பெறுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
- அதாவது சுமார் 2,000 மெகாவாட் ஆகும்.
- காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யும் பணியில் தமிழகத்தை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் மஹாராஷ்டிரா மூன்றாவது இடத்தில் குஜராத்தும் இருக்கின்றது.