தென்றல் காற்று என அழைக்கப்பட காரணம் யாது ?
Answers
Answered by
0
Explanation:
விளக்கம்
தென், தென்றி - தெற்கு
தமிழில் பருவ காலங்கள் ஆறு வகைப்படும்; இந்த ஆறு வகையில் இளவேனில் என்பதும் ஒன்றாகும். இளவேனில் (வசந்த)காலத்தில் வீசும் ஒரு சுகமான காற்றுக்கு தென்றல் காற்று என்று பெயர்.
பயன்பாடு
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் (முள்ளும் மலரும் திரைப்படப் பாடல், கண்ணதாசன்)
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த இளம் தென்றலே (பாசமலர் திரைப்படப் பாடல், கண்ணதாசன்)
பொதிகைமலை உச்சியிலே புறப்படும் தென்றல்
தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன்
(இலக்கியப் பயன்பாடு)
வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு (கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை)
வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் (சிலப். 2, 24).
(இலக்கணப் பயன்பாடு)
Answered by
1
தென்றல் காற்று:
- தென்றல் காற்று என அழைக்கப்படுவதற்கான காரணம் காற்று மரம்,செடி,கொடி, ஆறு, மலை என இவைகளை தாண்டி வருவதன் காரணமாக அதை தென்றல் என்று அழைக்கிறோம்.
- பொதுவாக தென்றல் காற்று என்றால் இவற்றை கடந்து வருவதற்கு சொன்னாலும் கூட மென்மையான ஒரு இதமான காற்றை நாம் தென்றல் என்று கூறுவோம்.
- ஏனெனில் சூறாவளியாக இருந்தாலும் சரி, புயலாக இருந்தாலும் சரி இக்காற்றுகளும் மரங்களையும், செடிகளையும், கொடிகளையும், ஆறுகளையும் தாண்டி தான் வருகின்றது.
- ஆனால் இவற்றில் இதமான தன்மை இல்லாமல் கடினமான தன்மை இருப்பதோடு இது பொருட்களையும், மனிதர்களையும் சேதப்படுத்த கூடியதாகும்.
- ஆனால் தென்றல் காற்று என்பது மனதிற்கு இனிமையைத் தரக்கூடியதாகவும், அமைதியை தரக்கூடியதாகவுக இருக்கும்.
Similar questions
Math,
6 months ago
Math,
6 months ago
Math,
6 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago