India Languages, asked by akshayash2205, 1 year ago

ஓசோன் படலத்தில் உருவான ஓட்டையினால் ஏற்படக்கூடிய தீமைகள் யாவை?

Answers

Answered by khuranaprisha2008
1

Answer:

ஓசோன் குறைபாடு என்பது வேறுபட்ட ஆனால் தொடர்புடைய இரண்டு நிகழ்வுகளை விளக்குவதாகும். 1970ன் பிற்பகுதியில் இருந்து அவதானித்ததில் புவியின் அடுக்கு மண்டலத்தில் ஓசோனின் மொத்த அளவு ஒவ்வொரு பத்தாண்டு கால அளவில் 4% அளவுக்கு குறைகிறது, இளவேனிற் காலத்தில் புவியின் வடதென் முனைப்பகுதிகளில் அதிகளவு ஓசோன் இழப்பு ஏற்படுகிறது என்பனவே அந்நிகழ்வுகள் ஆகும். இளவேனிற்காலத்தில் புவி முனைப்பகுதிகளில் அதிகளவு ஓசோன் இழப்பு ஏற்படுவது ஓசோன் ஓட்டை என அழைக்கப்படுகிறது. அடுக்கு மண்டல ஓசோன் குறைபாடுடன், அடிவளி மண்டல ஓசோன் குறைபாடு நிகழ்வுகளும், புவி முனைப் பகுதிகளின் மேற்பரப்பில், இளவேனிற் காலத்தின் போது நடைபெறுகின்றன.

Answered by anjalin
0

ஓசோன் படலத்தின்  ஓட்டையின் தீமைகள்:

  • ஓசோன் படலத்தில் உருவான ஓட்டையினால் ஏற்படக்கூடிய தீமைகள் பல உண்டு.
  • காரணம், இதில் ஓட்டை உருவாகிவிட்டால் இது பாதுகாக்கக்கூடிய புற ஊதாக் கதிர்கள் என்று சொல்லக்கூடியவை ஓட்டையின் காரணமாக நேரடியாக பூமிக்கு வரும்.  
  • இவ்வாறு நேரடியாக வரும்பொழுது அது உயிரினங்களாக வாழக்கூடிய எல்லாவற்றிற்ருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
  • அதன் மூலமாக பல நோய்களும் நமக்கு ஏற்படும்.
  • அதில் குறிப்பாக நம் உடலிலுள்ள தோல்கள் பெருமளவில் பாதிப்பிற்கு உள்ளாகும்.
  • அதே போன்று கண் பிரச்சனை இது போன்ற பல்வேறு நோய்களும், பிரச்சினைகளும் நம் உடலில் அதிக அளவில் ஏற்படும்.
  • இந்த ஓட்டை யாவும் காற்று மாசடைவது காரணமாகவே ஏற்படுகிறது.
  • இதனால் பூமியும்  தன் குளிர்ச்சித் தன்மையை இழந்து சூடான தன்மைக்கு மாறி விடும்
Similar questions