இவ் வசன கவிதையில் இடம் பெற்றுள்ள வேண்டுகோள் சொற்களும் கட்டளை சொற்களும் (வாசனையுடன் வா, அவித்து விடாதே) கவிதையின் உட்பொருளை துணை நிற்பது குறித்து எழுதி ?
Answers
Answer:
வாசனையுடன் வா - இதில் வாசனையுடன் வா என்பது கட்டளை சொல் ஆகும். (இக்கவிதையின் அடிபடையில்)
அவித்து விடாதே - இதில் அவித்துவிடாதே என்பது வேண்டுகோள் சொல் ஆகும் (இக்கவிதையின் அடிபடையில்)
Explanation:
இக்கவிதையின் தலைப்பு - "காற்று".
இக்கவிதை "மகாகவி பாரதியார்" எழுதியது.
'மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா' - இதயத்தை மயக்கும் இனிமையான மணமுடன் வா
'சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே' - சக்திகள் குறைந்து வருவதால், அதனை அணைத்துவிடாதே
Question ⬇️
இவ் வசன கவிதையில் இடம் பெற்றுள்ள வேண்டுகோள் சொற்களும் கட்டளை சொற்களும் (வாசனையுடன் வா, அவித்து விடாதே) கவிதையின் உட்பொருளை துணை நிற்பது குறித்து எழுதி ?
Answer ⬇️
● வாசனையுடன் வா :
மகரந்தத்தூளைச் சுமந்து கொண்டு மனதை மயங்கச் செய்கின்ற இனிய வாசனையுடன் வா என்பதன் பொருளாவது இயற்கையின் தூய மணமிக்க காற்றைச் சுவாசிக்க வேண்டும் என்பதேயாகும்.
● மடித்து விடாதே :
நெருப்பு எரிய சீரான காற்று அவசியம். அதிவேகக் காற்று நெருப்பைப் பரவச் செய்து மிகுந்த துன்பத்தை உருவாக்கும் மிகவும் குறைவான வேகத்தில் வீசும் காற்றானது நெருப்பு பற்றி எரிய முடியாமல் நெருப்பு அணைவதற்குக் காரணமாகிறது.
பாரதி தமது உயிரை நெருப்புக்கு ஒப்பிட்டுள்ளார். காற்றானது சக்தி குறைந்து போய் தன் உயிரை அவித்துவிடக் கூடாது எனவும் பேய் போல வீசி தமது உயிரை மடித்துவிடக் கூடாது எனவும் உட்பொருள் கொண்டு இவ்வேண்டுகோள் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.