India Languages, asked by Jayant1822, 1 year ago

பண்புத்தொகை என்றால் என்ன ?

Answers

Answered by Anonymous
3

Explanation:

பண்புத்தொகை என்பது பண்புப்பெயரைச் சேர்ந்து (தொகுத்து) வரும் பெயர்ச்சொல்.[1] ஒரு பண்பைக் குறிப்பது பண்புப்பெயர். எடுத்துக்காட்டாக,

நிறத்தைக் குறிக்கும் பண்புப்பெயர்ச் சொற்கள் - செம்மை, பசுமை, வெண்மை, கருமை

வடிவத்தைக் குறிக்குஞ் சொற்கள் - வட்டம், சதுரம்.

சுவையைக் குறிக்குஞ் சொற்கள் - இனிமை, கசப்பு

குணத்தைக் குறிக்குஞ் சொற்கள் - நன்மை, தீமை

எண்ணிக்கையைக் குறிக்குஞ் சொற்கள் - ஒன்று, இரண்டு, பத்து என்று பல்வேறு வகையான பண்புப்பெயருடன் சேர்ந்து வரும் பெயர்ச்சொல் பண்புத்தொகை எனப்படும்.

எடுத்துக்காட்டுக்கள் (முறையே):

வெண்கரடி = வெண்மை + கரடி

வட்டக்கோடு = வட்டமான கோடு

புளிச்சோறு = புளிக்கும் சோறு

பெருங்கடல் = பெருமை (பெரிய) + கடல்

மூவேந்தர் = மூன்று + வேந்தர்

Answered by anjalin
6

பண்புத்தொகை:

  • பண்புத்தொகை என்பது பண்புகளான நிறம், வடிவம், அளவு, சுவை போன்ற பண்புகளை உணர்த்தக் கூடிய மற்றும் அந்த பண்பு பெயர்களோடு சேர்ந்து வரக்கூடிய பெயர்ச் சொல்லுக்கும் இடையில் மெய் என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன என்கிற பண்பு உறுப்புகளும் மறைந்து வருவதற்கு தான் பண்புத்தொகை என்று சொல்லப்படும்.
  • உதாரணமாக செங்காந்தள் என்ற இந்தப் பண்பு தொகையில் செம்மையாகிய காந்தள் என்ற வார்த்தை உள்ளது.
  • இந்த இரண்டுக்கும் மத்தியில் ஆகிய என்கின்ற பண்பு உறுப்பு மறைந்து வந்திருக்கின்றது.
  • இரண்டாவது எடுத்துக்காட்டு வட்டத்தொட்டி இந்த உதாரணத்தில் வட்டமான தொட்டி என்கின்ற இந்த வார்த்தைக்கு மத்தியில் ஆன என்கிற பண்பு உருபு மறைந்து வந்திருக்கின்றது.
  • எனவே இதுபோன்று யாவும் பண்புத்தொகை குறிக்க கூடியதாகும்.
Similar questions