விருந்தோம்பல் அன்றும் இன்றும் எவ்வாறு உள்ளது என்பதை கூறு ?
Answers
Answered by
15
Explanation:
விருந்தோம்பல் அன்று வள்ளல்கள் வறியவர்களை நோக்கி வெளிப்படுத்துவதாக அமைந்தது. இன்று விருந்தினரான உறவினர்களை நோக்கி நம் கடமையாக உள்ளது
Answered by
46
விருந்தோம்பல் அன்றும் இன்றும்
- விருந்தோம்பல் என்பது அன்றைய காலங்களில் மிகவும் சிறப்பான ஒன்றாக இருந்தது.
- புதிதாக வரக்கூடிய நபர்கள் இரவில் தங்குவதற்காக தங்கள் வீட்டின் முன்புறம் திண்ணை அமைத்ததோடு, அதில் தலை வைக்க திட்டு போன்ற அமைப்பையும் நம் முன்னோர் அமைத்து இருந்தனர்.
- ஆனால் இன்று வீடு கட்ட கூடிய நபர்கள் அது போன்ற அமைப்பில் கட்டுவது கிடையாது.
- ஏனெனில் அறிமுகமில்லாத புதிய நபர்களை விருந்தினர்களாக ஏற்கும் மனப்பக்குவம் அவர்களிடத்தில் கிடையாது.
- அதே போன்று அன்றைய காலங்களில் தங்களுடைய வீட்டு விசேஷங்களில் அவர்களுடைய பகுதியில் வாழக்கூடிய மக்களுக்கும் வெளியூர் விருந்தினர்களுக்கும் தேவையான எல்லா உதவிகளையும் முற்கால மக்கள் செய்து வந்தனர்.
- ஆனால், இன்று இது நடைமுறையில் கிடையாது.
- ஏனெனில் இன்று பொதுவாக விசேஷம் என்று வருகின்ற சமயத்தில் அதற்காக தனியே மண்டபம் எடுத்து அதில் நடத்துவதன் காரணமாக இது போன்ற வழிமுறைகள் தவறிவிட்டது.
Similar questions
Physics,
5 months ago
Science,
5 months ago
CBSE BOARD X,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Science,
1 year ago