ஏன் கல்வியை போற்றிக் காக்க வேண்டும் என செய்குத்தம்பி பாவலர் குறிப்பிடுகிறார் ?
Answers
Answered by
6
Explanation:
This is the answer to the question. Ask me another question in 10th std topic
Attachments:
Answered by
4
கல்வியை போற்றிக் காக்க வேண்டும் என செய்குத்தம்பி பாவலர் குறிப்பிடக் காரணம்
- செய்குத்தம்பி பாவலர் எழுதிய நீதி வெண்பா என்ற நூலில் கல்வியினை போற்றிக் காக்க வேண்டுவதற்கான காரணம் பற்றி கூறப்பட்டு உள்ளது.
- கல்வியானது அருளினை பெருக்கக் கூடியது.
- கல்வியானது மாயையில் சிக்கிய நம் மனத்திலிருந்து மயக்கத்தினை அகற்றி, அறிவினை சீராக இயங்க வைக்கிறது.
- மேலும் கல்வி ஆனது அறிவுக்கு தெளிவு தந்து, உயிருக்கு உற்ற துணையாய் இருந்து காக்கும் அரணாய் உள்ளது.
- அத்தகைய சிறப்பினை உடைய கல்வியினை போற்றி காக்க வேண்டும் என செய்குத்தம்பி பாவலர் குறிப்பிடுகிறார்.
- 1907 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் தேதி சென்னையில் உள்ள விக்டோரியா அரங்கத்தில் அறிஞர்கள் பலர் கூடியிருந்த நிலையில் 100 செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டியதால் சதாவதானி என்று பாராட்டப் பெற்றவர் செய்குத்தம்பி பாவலர் ஆவர்.
Similar questions