ஆடத் தெரியுமா என்ற வினாவிற்கு பாடத் தெரியும் என்று கூறுவது ?
Answers
Answered by
3
இன மொழி விடை
- ஆடத் தெரியுமா என்ற வினாவிற்கு பாடத் தெரியும் என்று கூறுவது இன மொழி விடை ஆகும்.
விடை
- கேட்கப்பட்ட வினாவிற்கான கூறப்படும் சொல்லே விடை என அழைக்கப்படுகிறது.
- விடை எட்டு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- அவை முறையே சுட்டு விடை, மறை விடை, நேர் விடை, ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை மற்றும் இன மொழி விடை ஆகும்.
இன மொழி விடை
- கேட்கப்பட்ட வினாவிற்கு உரிய பதிலினை கூறாமல் அதற்கு இனமான வேறு ஒரு பதிலை கூறுவது இன மொழி விடை என அழைக்கப்படுகிறது.
(எ.கா)
- ஆடத் தெரியுமா? என்ற வினாவிற்கு ஆடலுக்கு இனமாகிய பாடத் தெரியும் என பதில் கூறுவது இன மொழி விடை ஆகும்.
Similar questions