வீட்டிற்கு தக்காளி இல்லை நீ கடைக்கு செல்கிறாயா என்று அக்கா தம்பி இடம் வினவி வேலையை சொல்வது ?
Answers
Answered by
0
ஏவல் வினா
வினா
- விடை அறிய வினவப்படுவது வினா என அழைக்கப்படுகிறது.
- வினா ஆறு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- அவை முறையே அறி வினா, அறியா வினா, ஐய வினா, கொளல் வினா, கொடை வினா மற்றும் ஏவல் வினா ஆகும்.
ஏவல் வினா
- ஒரு செயலினை செய்யுமாறு ஏவுதல் அல்லது கட்டளை ஈடும் பொருட்டு தொடுக்கப்படும் வினா ஏவல் வினா என அழைக்கப்படுகிறது.
(எ.கா)
- வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்கு செல்கிறாயா? என்று அக்கா தம்பி இடம் வினவி வேலையை சொல்வதாக உள்ள வினா ஏவல் வினா ஆகும்.
- இதில் அக்கா தம்பியை கட்டளை ஈடுவதாக வினா உள்ளதால் இது ஏவல் வினா ஆகும்.
Similar questions
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Chemistry,
1 year ago