எதிர் நிரல் நிறை பொருள்களை விவரிக்க
Answers
Answered by
7
எதிர் நிரல் நிறை பொருள் கோள்
- ஒரு செய்யுளில் எழுவாய்களை வரிசையாக அமைத்து, எழுவாய்கள் ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராகக் கொண்டு பொருள் கொள்ளுவதற்கு எதிர் நிரல் நிறை பொருள் கோள் என்று பெயர்.
உதாரணம்
- விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்.
விளக்கம்
- இந்த குறளில் எழுவாய்களான விலங்கு, மக்கள் ஆகிய இரண்டினையும் முதல் அடியில் வரிசைப்படுத்தி உள்ளனர்.
- அதே போல இரண்டாம் அடியில் எழுவாய்களின் பயனிலைகளான கற்றார், ஏனையவர் (கல்லாதவர்) ஆகிய இரண்டும் வரிசையாக உள்ளது.
- ஆனால் கற்றார் மக்கள் எனவும், கல்லாதவரான ஏனையவர் விலங்கு எனவும் பொருள் கொள்ள வேண்டும்.
- பயனிலைகள் எதிர் எதிராக அமைவதால் இது எதிர் நிரல் நிறை பொருள் கோள் என அழைக்கப்படுகிறது.
Answered by
0
Answer:
sorry I didn't understand that language plz write in english and hindi
Similar questions
Math,
5 months ago
Computer Science,
5 months ago
India Languages,
10 months ago
Chemistry,
10 months ago
Art,
1 year ago
Physics,
1 year ago
English,
1 year ago