கரகாட்டம் என்றால் என்ன ?
Answers
Answered by
14
கரகாட்டம்
- கரகாட்டம் ஆனது பல்லாண்டுகளாய் நம் மரபுடன் இணைந்து வாழும் கலை ஆகும்.
- கரகாட்டம் என்பது கரகம் என்ற பித்தளை செம்பையோ அல்லது சிறிய குடத்தையோ தலையில் வைத்து தாளத்திற்கு ஏற்ப நடனம் ஆடுவது ஆகும்.
- இந்த நடனத்தினை கரகம், கும்பாட்டம் எனவும் அழைப்பர்.
- கரகாட்டத்தினை ஆண், பெண் என இரு பாலாரும் சேர்ந்து நடனம் ஆடுவர்.
- சில சமயம் ஆண் பெண் வேடம் போட்டும் நடனம் ஆடுவர்.
- நீரற வறியாக் கரகத்து என்ற புறநானூற்றுப் பாடலில் கரகம் பற்றி கூறப்பட்டு உள்ளது.
- மேலும் சிலப்பதிகார ஆடலரசியான மாதவி ஆடிய 11 வகை ஆடல்களில் குடக்கூத்து என்ற ஆடலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- இந்த குடக்கூத்தே கரகாட்டத்திற்கு அடிப்படை என்று கூறப்படுகிறது.
Answered by
5
- பன்னெடுங்காலமாக மக்களால் விரும்பப்படும் உயர்ந்த கலைகளில் ஒன்றே கரகாட்டம்.
- கரகம் என்னும் பித்தளைச் செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்துத் தாளத்திற்கு ஏற்பஆடுவது, கரகாட்டம்.
- இந்த நடனம் கரகம், கும்பாட்டம் என்றும்அழைக்கப்படுகிறது.
- கரகச் செம்பின் அடிப்பாகத்தை உட்புறமாகத் தட்டி, ஆடுபவரின் தலையில் நன்கு படியும்படி செய்கின்றனர். தலையில் செம்பு நிற்கும் அளவு எடையை ஏற்றுவதற்குச் செம்பில் மணலையோ பச்சரிசியையோ நிரப்புகின்றனர்.
- கண்ணாடியாலும் பூக்களாலும் அழகூட்டிய கரகக் கூட்டின் நடுவில், கிளி பொம்மை பொருத்திய மூங்கில் குச்சியைச் செருகி வைத்து ஆடுகின்றனர்.
- நையாண்டி மேள இசையும் நாதசுரம், தவில், பம்பை போன்ற
- இசைக்கருவிகளும் இசைக்கப்படுகின்றன. ஆணும் பெண்ணும் சேர்ந்து நிகழ்த்தும் கரகாட்டத்தில் சில
- நேரங்களில் ஆண், பெண் வேடமிட்டு ஆடுவதும் உண்டு. கரகாட்டம் நிகழ்த்துதலில் இத்தனை பேர்தான் நிகழ்த்த வேண்டும் என்ற வரையறை இல்லை.
- சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களில் குடக்கூத்து என்ற ஆடலும் குறிப்பிடப்படுகிறது.
Similar questions
Hindi,
5 months ago
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Art,
1 year ago
Physics,
1 year ago