தேவர் ஆட்டத்திற்கு உரிய இசைக்கருவி குறித்தும் மற்றும் உடை அலங்காரம் குறித்தும் எழுதுக ?
Answers
Answered by
2
I'm not able to understand this....plzz Translate this in English....
Answered by
2
தேவர் ஆட்டம்:
- தேவராட்டம் என்பது ஆண்கள் மட்டுமே ஆடக்கூடிய ஒரு வகை ஆட்டம் ஆகும்.
- இந்த தேவராட்டம் வானத்திலுள்ள தேவர்கள் ஆடிய ஆட்டம் என்ற கருத்தில் பார்க்கப் படுவதுண்டு.
- இந்த ஆட்டத்தில் சுமார் 8 முதல் 13 ஆட்டக் கலைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பது ஒரு பொது நடைமுறையாகவும், மரபாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த ஆட்டத்திற்கு இசைக்கருவியாக தேவ துந்துபி என்று அழைக்கப்படக்கூடிய ஒன்று பயன்படுத்தப்படுகின்றது.
- அதேபோன்று இவ்வாட்டத்திற்குரிய உடை மற்றும் அலங்காரத்தை பற்றி பார்க்கும் வேலையில் இக்கலைஞர்கள் வேட்டி கட்டியும், தலையிலும் அவர்களுடைய இடையிலும் சிறு துணியை கட்டியும் இருப்பார்.
- தங்களது கால்களில் சலங்கை அணிந்தும் ஒப்பனையுடன் இந்த கலையை நிகழ்த்துகிறார்கள்.
Similar questions