India Languages, asked by Siddhu9831, 11 months ago

கம்பர் குறிப்பு வரைக ?

Answers

Answered by MysticPetals
9

Answer:

கம்பர் குறிப்பு:

கம்பர் கி.பி. 12ஆம் நூற்றாண்டில்

நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டம்

திருவழுந்தூர் என்றழைக்கப்படும்

தேரழுந்தூர் என்னும் ஊரில் பிறந்தவர்.

கம்பருடைய தந்தை ஆதித்தன் என்றும், கம்பருடைய மகன் அம்பிகாபதி என்றும் கூறப்படுகிறது

Answered by steffiaspinno
2

கம்பர் குறிப்பு:

  • கம்பர் இவர் சோழ வளநாட்டில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள தேரழுந்தூரில் பிறந்தவர்.
  • இவரை திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல் ஆதரித்தார்.
  • இவரால் இயற்றப்பட்ட கம்பராமாயணம் தமிழ் இலக்கியத்தில் மிகப்பெரிய ஒரு திருப்புமுனை என்று சொல்லுமளவிற்கு முக்கியத்துவம் பெறுகின்றது.
  • இதனைப் படித்த எத்தனையோ புலவர்கள் படித்துவிட்டு கம்பரை புகழ்ந்திருக்கிறார்கள்.
  • அவரை பாராட்டியும் இருக்கின்றார்கள் கல்வியில் பெரியவன் கம்பன் என்றும் கவிச்சக்கரவர்த்தி என்றெல்லாம் பட்டமும் கூட இவருக்கு சூட்டுகின்றனர் புலவர் பெருமக்கள்.
  • இவர் பெருமளவில் கவித்திறன் பெற்றிருந்தார்.
  • அதனால்தான் கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்கின்ற முது மொழி கூட முன்னோர்களால் இவருடைய கவித்திறனை பாராட்டும் வண்ணமாக சொல்லப்பட்டது.
  • இது போன்று பல்வேறு சிறப்புகள் கம்பருக்கு இருப்பதோடு பல பட்டங்களும் உண்டு.
Similar questions