ஐவகை நிலத்திற்குரிய மரம் பூ பற்றி கூறு ?
Answers
Answered by
0
I can't understand your question
Answered by
0
ஐவகை நிலத்திற்குரிய மரம் மற்றும் பூ:
- ஐவவை நிலத்திற்குரிய தெய்வங்கள் இருந்ததோ அதே போன்ற ஐவகை நிலத்திற்குரிய மரம் பூவும் தனித்தனியே உள்ளது.
- குறிஞ்சி என்ற மலை சார்ந்த பகுதியில் குறிஞ்சி, காந்தன் என்ற பூ வகைகளும் அகில், வேங்கை என்ற மர வகைகளும் அந்நிலத்திற்கு உரித்தானவையாகும்.
- அதைத் தொடர்ந்து முல்லை நிலத்தில் முல்லை, தோன்றி ஆகிய பூவினங்களும் கொன்றை, காயா என்கின்ற மர வகைகளும் அங்கு இருக்கின்றன.
- மருதம் என்ற வயலும் வயல் சார்ந்த பகுதியில் செங்கழுநீர், தாமரை ஆகிய பூ இனங்களும் காஞ்சி, மருதம் ஆகிய மர வகைகளும் அந்த நிலத்திற்கு உரியதாகும்.
- நெய்தல் என்ற கடல் சார்ந்த பகுதியில் தாழை, நெய்தல் ஆகிய பூ வகைகள் இருப்பதோடு புன்னை, ஞாழல் என்ற மர வகைகளும் நிலத்திற்கு உரித்தானதாகும்.
- பாலைவனத்தை குறிக்கக் கூடிய குரவம், பாதிரி ஆகிய பூவகைகளும் மரத்தில் இலுப்பை, பாலை ஆகிய மரங்களும் அந்நிலத்திற்கு உரித்தானவையாகும்.
Similar questions