பொருத்துக
அ) செழியன் வந்தது - கால வழு
ஆ) கண்ணகி உண்டான் - இட வழு
இ) நீ வந்தேன் - பால் வழு
ஈ) நேற்று வருவான் - திணை வழு
Answers
Answered by
0
Answer:
செழியன் வந்தது என்பது திணை வழு
கண்ணகி உண்டான் என்பது பால் வழு
நீ
Answered by
1
வழு:
- இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்
- இந்த வழுவானது ஏழு வகைப்படும். அவை திணை, பால், இடம், காலம் , வினா, விடை, மரபு ஆகும்.
செழியன் வந்தது என்பது திணை வழுவாகும்.
- உயர்திணைப்பெயரான செழியன் என்ற சொல்லைத் தொடர்ந்து வந்தது எனும் அஃ றினைப் பெயர் வந்துள்ளதால் இது திணைவழு எனப்பட்டது
கண்ணகி உண்டான் என்பது பால் வழுவாகும்.
- கண்ணகி எனும் பெண்பால் பெயரை தொடர்ந்து உண்டான் எனும் ஆண்பால் செய்யும் செயலை பற்றி குறிப்பதால் இது பால் வழு எனப்பட்டது.
நீ வந்தேன் என்பது இட வழுவாகும்.
- நீ எனும் முன்னிலைப் பெயர் வந்தேன் எனும் தன்மை வினையைக் கொண்டு முடிவதால் இது இடவழு எனப்பட்டது.
நேற்று வருவான் என்பது கால வழுவாகும்.
- நேற்று என்பது இறந்த காலத்தையும் வருவான் என்பது எதிர்காலத்தையும் குறிப்பதால் இது காலவழு எனப்பட்டது.
Similar questions
Science,
5 months ago
Hindi,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Biology,
1 year ago