India Languages, asked by dewanand1503, 11 months ago

நிரல் நிறை அணி சான்றுடன் விளக்குக

Answers

Answered by steffiaspinno
50

அணி :

  • மக்களுக்கு அழகு சேர்க்கும் அணிகலன்களைப் போல செய்யுள்களுக்கு அழகு சேர்க்கக்கூடிய சுவையை அளிப்பது அணிகளாகும் .

நிரல்நிறை அணி :

  • நிரல் என்பது வரிசை, நிறை என்பது  நிறுத்துதல் என்றும் பொருள்படும் .
  • நிரல்நிறை அணி என்பது ஒரு செய்யுளில் உள்ள சொல்லையும் பொருளையும் மாற்றாமல் அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வதாகும்.  

  " அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

   பண்பும் பயனும் அது ".    

இக்குறளின் பொருள்:  

  • இல்வாழ்க்கை என்பது அன்பும் அறனும் உடையதாக இருந்தால் அதுவே வாழ்க்கையின் பண்பும் பயனுமாக விளங்கும்.  

அணி விளக்கம்:  

  • இந்த  குறளில் உள்ள அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும் பயனும் என்ற சொற்களை முறைபடுத்தி  கூறியுள்ளமையால் இது நிரல் நிறைஅணி ஆகும்.
Answered by indrakumarjeevitha12
2

Answer:

please mark the answer as "BRAINLIEST ANSWER"

Attachments:
Similar questions