India Languages, asked by bhavarannya6116, 11 months ago

பொருத்துக
அ) என் அம்மை வந்தாள் என்று மாட்டைக் கூறுவது - பால் வழுவமைதி
ஆ) வாடா ராஜா வாடா கண்ணா என மகளை தாயை அழைப்பது - இட வழுவமைதி
இ) இந்த மாறன் ஒருநாளும் பொய் கூற மாட்டான் என மாறன் பிறரிடம் சொல்வது -காலவழுவமைதி
ஈ) குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் - திணை வழுவமைதி

Answers

Answered by steffiaspinno
3

பொருத்துக :

  • இலக்கணமுறைப்படி பிழையுடையதாக கொண்டாலும், இலக்கண ஆசிரியர்களால் ஏதாவது ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக் கொள்ளப்படுவது வழுவமைதியாகும்.

என் அம்மை வந்தாள் என்று மாட்டைக் கூறுவது திணை வழுவமைதி.

  • என் அம்மை வந்தாள் என்பதில் அஃறிணை உயர்திணையாகக் கொள்ளப்பட்டதால் இது திணை வழுவமைதி எனப்பட்டது

வாடா ராஜா வாடா கண்ணா என மகளை தாயை அழைப்பது பால்வழுவமைதி.

  • பெண்பால் ஆண்பாலாகக் கொள்ளப்பட்டதால் இது பால்வழுவமைதி எனப்பட்டது.

இந்த மாறன் ஒருநாளும் பொய் கூற மாட்டான் என மாறன் பிறரிடம் சொல்வது இட வழுவமைதி .

  • இதில் தன்மையானது படர்க்கை இடத்தில் கூறப்படுவதால்,  இது   இட வழுவமைதி எனப்பட்டது.  

குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் கால வழுவமைதி .

  • குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருவார் என்பது தான் சரியான பொருத்தமாகும்.
  • ஆனால் அவர் கண்டிப்பாக வருவார் என்பதை கொண்டு இத்தொடர் அமைக்கப்பட்டுள்ளதால் இது கால வழுவமைதி  எனப்பட்டது.
Similar questions