பாய்மங்களில் உள்ள ஒரு பொருளின் மீது
மிதப்பு விசை செயல்படுகிறது. ஏனெனில்
அதன் _____________ பகுதியில் உள்ள
அழுத்தம் அதன் மேல் பகுதியில் உள்ள
அழுத்தத்தைவிட அதிகமாகும்.
Answers
Answered by
0
கீழ்
- திரவங்கள் மற்றும் வாயுக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாயும் அல்லது இடம்பெயரும் தன்மை உடையதால் அவற்றை பாய்மங்கள் என்றும் அழைக்கலாம்.
- ஒரு பொருளானது பாய்மங்களில் முழுமையாக அல்லது ஓரளவிற்கு மூழ்கி இருக்கும் போது, அந்த பொருளின் மீது பாய்மத்தினால் ஒரு குறிப்பிட்ட மேல்நோக்கிய விசை செலுத்தப்படும்.
- மேலும் திரவங்களின் கீழ் பகுதியில் உள்ள அழுத்தம் ஆனது அதன் மேல் பகுதியில் உள்ள அழுத்தத்தினை விட அதிகமாக உள்ளது.
- இந்த அழுத்த மாறுபாட்டின் காரணமாகவே திரவமானது பொருளின் மீது ஒரு குறிப்பிட்ட மேல்நோக்கிய விசை செலுத்துகிறது.
- இந்த விசையே மிதப்பு விசை என அழைக்கப்படுகிறது.
- இந்த நிகழ்விற்கு மிதப்பு தன்மை என்று பெயர்.
Similar questions