கூற்று: பொருளானது அதன் எடைக்குச் சமமான எடை கொண்ட திரவத்தை
இடப்பெயர்ச்சி செய்வதன் மூலம் மிதக்கிறது.
காரணம்: இந்த நிகழ்வில் பொருளானது எந்தவொரு கீழ்நோக்கிய
நிகரவிசையையும் பெற்றிருக்கவில்லை.
Answers
Answered by
0
கூற்று காரணம் இரண்டும் சரி.மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
- ஆர்க்கிமிடிஸ் தத்துவமானது ஒரு பொருளானது பாய்மத்தில் மூழ்கியிருக்கும் போது, அந்த பொருள் இடப்பெயர்ச்சி செய்த பாய்மத்தின் எடைக்குச் சமமான அளவுடைய செங்குத்தான மிதப்பு விசையை உணரும்” என்று கூறுகிறது.
- ஓய்வு நிலையில் உள்ள பாய்மத்தில் ஒரு பொருள் முழுமையாகவோ பகுதியாகவோ மூழ்கும் போது, அப்பொருள் இடப்பெயர்ச்சி செய்த பாய்மத்தின் எடைக்குச் சமமான மேல்நோக்கு விசையை உணரும்.
- ஒரு பொருள் தன் எடையின் ஒரு பகுதியை இழப்பதற்கு காரணம் இந்த மேல்நோக்கு விசையாகும்.
- எடையில் ஏற்பட்ட இந்த இழப்பு மேல்நோக்கு விசைக்குச் சமமாக உள்ளது.
- எனவே இந்த நிகழ்வில் பொருளானது எந்தவொரு கீழ்நோக்கிய நிகரவிசையையும் பெற்றிருக்கவில்லை.
Similar questions