சில மாணவர்கள் அருகிலுள்ள குளத்தைக் கடக்கும் பொழுது, நீரில் மூழ்கும் ஒரு
மனிதன் உதவிவேண்டி அலறுவதைக் கேட்ட னர். உடனே அவர்கள் அவ்வழியே
சென்றவரை உதவிக்கு அழைத்தனர். அவர் காற்று நிரப்பப்பட்ட குழாய் ஒன்றை
நீரினுள் வீசினார் . ரப்பர் குழாய் போடப்பட்டதால்அந்த மனிதன்
காப்பாற்றப்பட்டான்.
அ) ஏன் அந்த வழிப்போக்கர் காற்று
நிரப்பப்பட்ட ரப்பர் குழாயை, நீரில்
மூழ்கும் மனிதனைக் காப்பாற்றுவதற்குப்
பயன்படுத்தினார் ?
ஆ) இங்கு பயன்படும் தத்துவத்தைக் கூறு.
இ) மாணவர்கள் மற்றும் வழிப்போக்கரின்
எந்த குணங்கள் நீரில் மூழ்கும்
மனிதனைக் காப்பாற்ற உதவியது
என்பதை அடையாளம் காண் .
Answers
Answered by
0
காற்றின் அடர்த்தி
- நீரை விட காற்றின் அடர்த்தி ஆனது குறைவு ஆனது ஆகும்.
- எனவே காற்று நிரப்பப்பட்ட ரப்பர் குழாய் நீரில் மிதக்கும்.
- இதன் காரணமாகவே வழிப்போக்கர் காற்று நிரப்பப்பட்ட ரப்பர் குழாயினை குளத்தில் போட்டு மூழ்குபவரை காப்பாற்றினார்.
மிதத்தல் தத்துவம்
- மிதத்தல் தத்துவத்தின் படி ஒரு பொருள் நீரினை விட குறைவான அடர்த்தியினை உடையதாக இருந்தால் அது நீரில் மிதக்கும்.
- அது போல நீரினை விட அதிகமான அடர்த்தியினை உடைய பொருளினை நீரில் போட்டால் அது நீரில் மூழ்கும்.
- மாணவர்களின் ஆபத்து காலத்தில் உதவுவதல், பிறரை அழைத்தல் முதலிய குணமும், வழிப்போக்கரின் அறிவியல் ஞானம், உயிரினை காப்பாற்றும் எண்ணமும் நீரில் மூழ்கியவரை காப்பாற்றியது.
Similar questions