Science, asked by anushkasahu1906, 11 months ago

_____________ கரிமப் பொருட்கள் மற்றும் விலங்குக் கழிவுகளை அம்மோனியாவாக மாற்றுகின்றன.

Answers

Answered by steffiaspinno
0

கெட்டழிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள்  கரிமப்  பொருட்கள் மற்றும் விலங்குக் கழிவுகளை அம்மோனியாவாக மாற்றுகிறன்றன.

  • அனைத்து உயிரினங்களும் உயிர்வாழத் தேவையான முக்கியத்துவம் வாய்ந்த முதல் நிலை  ஊட்டச்சத்து நைட்ரஜன் ஆகும்.  
  • உயிரினங்களின் பயன்பாட்டிற்கு தேவைப்படும் நைட்ரஜனானது அம்மோனியாவாகவோ, அமினோ அமிலங்களாகவோ அல்லது நைட்ரேட் உப்புக்கள் வடிவிலோ இருக்க வேண்டும்.
  • அம்மோனியாவாதல் என்பது நைட்ரஜன் அடங்கிய கழிவுப் பொருள்களை கெட்டழிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் அம்மோனியச்  சேர்மங்களாக சிதைவுறச் செய்யும் நிகழ்வு ஆகும்.
  • விலங்குப் புரதங்களானவை , யூரியா,  யூரிக் அமிலம் அல்லது அம்மோனியா வடிவில் கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன.
  • கெட்டழிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும்  பூஞ்சைகள் ஆகியவை , விலங்குப் புரதங்கள்,  இறந்த விலங்குகள் மற்றும் தாவரங்களை  சிதைவுறச் செய்து அம்மோனியச் சேர்மங்களாக  மாற்றுகின்றன.
Similar questions