Science, asked by romeorajkumar3976, 11 months ago

முதலாவது நோய்எதிர் உயிரிப்பொருள்__________________ ஆகும். இது_____________ ஆல் உருவாக்கப்பட்டது.

Answers

Answered by ItzRupam
0

Explanation:

I DID NOT UNDERSTAND .

THANK YOU

Answered by steffiaspinno
0

முதலாவது நோய் எதிர் உயிரிப்பொருள் பென்சிலின்  ஆகும். இது  பென்சிலியம் நொடேட்டம் என்ற ஒரு வகை பூஞ்சையிலிருந்து உருவாக்கப்பட்டது.

  • சில வேதிப்பொருள்களை பாக்டீரியா, பூஞ்சை போன்ற  நுண்ணுயிர்கள் வெளிப்படுத்துகின்றன.
  • இந்த வேதிப்பொருட்கள்  மற்ற நுண்ணுயிர்களின் வளர்ச்சியையும், வளர்சிதை மாற்றத்தையும் தடுக்கும் தன்மை பெற்றவை.
  • இத்தகைய வேதிப்பொருட்கள் நுண்ணுயிர் எதிரிகள் என்று அழைக்கப்படுகின்றன.
  • இவை அதிகத் திறனுடன் செயல்படக்கூடியவை. 1929 ஆம் ஆண்டு  அலெக்ஸாண்டர் ஃபிளமிங் என்பவர் முதன்முதலில் பென்சிலின் என்ற நுண்ணுயிர் எதிரியை கண்டுபிடித்தார்.
  • இது பென்சிலியம் நொடேட்டம் என்ற ஒரு வகை பூஞ்சையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. மூட்டுகளில் ஏற்படும் நோய், இதயக் குழாய்கள் சுருங்குதல், மூச்சுக்குழாய் மற்றும் நிமோனியா  போன்ற நோய்களுக்கு இது பயன்படுகிறது.
  • நுண்ணுயிர்  எதிர்பொருள்களுக்கு மூன்று  முக்கிய மூலாதாரங்கள் உள்ளன.
  • அவை, பாக்ட்டீரியா,  பூஞ்சை, ஆக்டினோமைசடிஸ்.    
Similar questions