_____________________ என்ற தடுப்பூசி காச நோய்க்கு போதுமான பாதுகாப்பினை வழங்குகிறது
Answers
Explanation:
காசநோய்த் தடுப்பூசி அல்லது பி.சி.ஜி தடுப்பூசி (Bacillus Calmette–Guérin (BCG) vaccine) என்பது கால்நடைக் காசநோய்க் கிருமியிலிருந்து உண்டாக்கப்பட்ட உயிருள்ள மற்றும் வலிமை குறைக்கப்பட்ட பாக்டீரியங்களைக் கொண்ட தடுப்பூசி ஆகும்.[1] வளர்ப்பூடகங்களில் தொடர்ச்சியாய்ப் பல்லாண்டுகள் வளர்த்ததன் மூலம் இக்கிருமி தனது நோய் உண்டாக்கும் தன்மையை இழந்தது. இத் தடுப்பூசி எந்த அளவு காசநோயிலிருந்து காப்பாற்றும் என்பது நாடுகளைப் பொறுத்து வேறுபடுகிறது. ஒட்டு மொத்தமாய்ப் பார்த்தால் இதன் தடுப்பு மதிப்பு 80 விழுக்காடு ஆகும். காச நோய் மற்றும் தொழு நோய் அதிகம் உள்ள நாடுகளில் இத் தடுப்பூசி முதன்மையாகப் பயன்படுகிறது.[1]பிறந்த ஆரோக்கியமான குழந்தைக்கு ஒரு முறை மட்டும் வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.[1] புரூலி புண் மற்றும் சிறு நீர்ப்பை புற்று நோய் ஆகியவற்றையும் கட்டுப்படுத்த இத் தடுப்பூசி பயன்படுகிறது.[2]
இம் மருந்திற்கு கடுமையான பக்க விளைவுகள் ஏதுமி்ல்லை. ஊசி குத்துமிடத்தில் சிவப்பு நிறத்தில் வீக்கமோ அல்லது வலியோ இருக்கும். ஊசி குத்தியிடத்தில் சிறிய புண் ஏற்பட்டு பின் தழும்பாக மாறும். கர்ப்ப காலத்தில் இந் மருந்தைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல. மாட்டில் பொதுவாகக் காணப்படும் மைக்கோபாக்டீரியம் போவிசு (Mycobacterium bovis) என்ற பாக்டீரியாவிலிருந்து இம் மருந்து தயாரிக்கப்படுகிறது.
BCG (பேசிலஸ் கால்மெட் குயிரின்) என்ற தடுப்பூசி காசநோய்க்கு போதுமான பாதுகாப்பினை வழங்குகிறது.
- மனிதனின் உடலில் பல நோய்கள் நீரினாலும், காற்றினாலும் பரவுகின்றன.
- காற்றினால் பரப்படும் நோயானது வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் உருவாகிறது.
- இவ்வாறு நோய் பரவுவதற்கு காரணம் மனிதன் சுவாசிக்கும் காற்றிலுள்ள மாசுக்களாகும்.
- இந்த மாசடைந்த காற்றினை மனிதன் தொடர்ந்து உள்ளிழுப்பதால் நோய்கள் பரவி வருகின்றன,
- காற்றினால் வேகமான பரவும் நோய்கள் காசநோய், கக்குவான் இருமல், தொண்டை அழற்சி நோய் ஆகியவை ஆகும்.
- காச நோயானது மைக்கோபாக்டீரியம் டியுபர்குளோசிஸ் என்னும் பாக்டீரியாவால் உருவாகிறது. இது ஒரு தொற்று நோயாகும்.
- முக்கியமாக இந்த பாக்டீரியாவானது நுரையீரலைத் தாக்கி சுவாசித்தலில் பல இடர்பாடுகளை தருகிறது.
- இவ்வாறு இந்த காசநோய்க்கு போதுமான பாதுகாப்பை வழங்க BCG (பேசிலஸ் கால்மெட் குயிரின்) என்ற தடுப்பூசி போடப்படுகிறது.