சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தைச்
சுபாஷ் சந்திர போஸ் எங்கு ஏற்படுத்தினார்?
(அ) இரங்கூன் (ஆ) மலேயா
(இ) இம்பால் (ஈ) சிங்கப்பூர்
Answers
Answered by
1
சிங்கப்பூர்
- மோகன் சிங் தலைமையின் கீழ் ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்த போர் கைதிகள் வந்தனர்.
- ஜப்பானிடம் நடந்த போரில் சிங்கப்பூர் தோல்வியை தழுவியது.
- இதனால் கிடைத்த போர் கைதிகளும் மோகன் சிங்கின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தனர்.
- இதனால் அவரின் கட்டுப்பாட்டின் கீழ் 45, 000 பேர் வந்தனர்.
- அதில் 40,000 பேரைக் கொண்ட இந்திய தேசிய இராணுவத்தினை பலப்படுத்தினார்.
- 1943 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2ல் சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூர் சென்றார்.
- அங்கிருந்து டோக்கியோ சென்று ஜப்பான் பிரதமர் டோஜோவைச் சந்தித்தார்.
- இந்தியாவை ஆக்கிரமிக்கும் எண்ணம் ஜப்பானுக்கு இல்லை என்று அவர் கூறினார்.
- அதன்பின் 1943 அக்டோபர் 21ல் சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசினை சிங்கப்பூரில் ஏற்படுத்தினார்.
Similar questions