இந்திய வெளியுறவுக் கொள்கையின்
அடிப்படைக் கோட்பாடுகள் யாவை? அணிசேரா
இயக்கத்தில் ஆப்பிரிக்க ஆசிய நாடுகளை
இணைத்ததில் பிரதமர் நேரு அவர்களின்
பங்கினை விளக்குக
Answers
Answered by
0
இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகள்
- இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகள் காலணி எதிர்ப்பு அல்லது ஏகாதிபத்தியத்தினை எதிர்த்தல் வேண்டும்.
- இன ஒதுக்கல் மற்றும் இன வெறியினை எதிர்த்தல் வேண்டும்.
- ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுடன் ஒற்றுமை வளர்த்தல் வேண்டும்.
- வல்லரசு நாடுகளுடன் அணி சேராமல் இருத்தல் வேண்டும்.
- ஒரு நாட்டின் எல்லைகள் மற்றும் இறையாண்மையை மதித்து நடத்தல் வேண்டும்.
- ஒரு நாட்டின் உள் விவாகரங்களில் தலை இடாமல் இருத்தல் வேண்டும்.
- உலக அமைதியினை மேம்படுத்துதல் வேண்டும். முதலியன ஆகும்.
பிரதமர் நேருவின் பங்கு
- 1947 ஆம் ஆண்டு மார்ச் மாதம் டெல்லியில் நடந்த நேரு ஏற்பாடு செய்த ஆசிய உறவுகள் மாநாட்டில் 20 நாடுகள் கலந்துக் கொண்டன.
- ஆசிய நாடுகளின் விடுதலை மற்றும் உலகில் ஆசிய நாடுகளின் நிலையினை இந்த மாநாட்டில் கலந்து உரையாடினர்.
Similar questions