டென்னிஸ் மைதான உறுதிமொழிக்கு இட்டுச்
சென்ற எதிப்புக்குத் தலைமையேற்ற பிரபு
ஆவார்.
(அ) மாரட் (ஆ) டாண்டன்
(இ) லஃபாயட் (ஈ) மிராபு
Answers
Answered by
0
மிராபு
- சமூகத்தின் மூன்றாம் பிரிவினைச் சார்ந்த பிரதிநிதிகளுக்கு (உரிமைகள் அற்ற சாதாரண மக்கள்) கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
- இதனால் 1789 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ம் தேதி சமூகத்தின் மூன்றாம் பிரிவினைச் சார்ந்த பிரதிநிதிகள் தேசிய சட்ட மன்றத்தினைக் கூட்டினர்.
- அதன் பின் அவர்கள் 1789 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ம் தேதி முப்பேராயத்தினை விட்டு வெளியேறி டென்னிஸ் மைதானத்தில் ஒன்று கூடினர்.
- அரசரின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
- அதுவரை கலைந்து செல்லப் போவதில்லை என உறுதிமொழி எடுத்தனர்.
- இதுவே டென்னிஸ் மைதான உறுதிமொழி ஆகும்.
- டென்னிஸ் மைதான உறுதிமொழிக்கு இட்டுச் சென்ற எதிர்ப்புக்குத் தலைமையேற்ற நிலப்பிரபு மிராபு ஆகும்.
Similar questions