History, asked by AbhishekDixit651, 11 months ago

கீழ்க்காணும் கூற்றுகளில் எது / எவை
சரியானது / சரியானவை.
கூற்று I: 1776 ஜூலை 4இல் பதின்மூன்று
காலனிகளும் இங்கிலாந்திடமிருந்து விடுதலை
பெற்றதாக அறிவித்தன.
கூற்று II: சுதந்திரப் பிரகடனத்தைத்
தயாரித்ததில் தாமஸ் ஜெபர்சன் மிக முக்கியப்
பங்கினை வகித்தார்.
(அ) I (ஆ) II
(இ) இரண்டும் தவறு (ஈ) இரண்டும் சரி

Answers

Answered by steffiaspinno
0

‌ச‌ரியா தவறா

இர‌ண்டு‌ம் ‌ச‌ரி

  • பாஸ்டன் தேநீர் விருந்து ‌நிக‌ழ்வா‌ல் கோப‌ம் கொ‌ண்ட இ‌ங்‌கிலா‌ந்து 1774 ஆ‌ம் ஆ‌ண்டு  பொறுத்துக்கொள்ள முடியாத சட்டங்களை இய‌ற்‌றியது.
  • இத‌‌ன் விளைவாக ஜார்ஜியா தவிர ஏனைய காலனிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பிலடெல்பியாவில் முதன்முதலில் பொது மாநாட்டைக் கூ‌ட்டின‌ர்.
  • இ‌தி‌ல் பொறுத்து கொள்ள முடியாதச் சட்டங்கள் நீக்கப்பட வேண்டுமெனக் கோரினர்.  
  • இத‌ற்‌கிடை‌யி‌ல் 1776 ஆ‌ம் ஆ‌ண்டு ஜூலை மாத‌ம் 4‌ம் தே‌தி 13 குடியே‌ற்ற நாடுகளு‌ம் இ‌‌ங்‌கிலா‌ந்து நா‌ட்டிட‌‌ம் இரு‌ந்து ‌விடுதலை பெறுவதாக அ‌றி‌வி‌த்தது.
  • சுதந்திரப் பிரகடனத்தை வடித்ததில் முக்கியப் பங்காற்றியவர் தாமஸ் ஜெபர்சன் ஆவார்.
  • அதுவே  ‌‌பி‌‌ன்ன‌ர் அமெரிக்க ஐக்கிய நாடுகள் எனும் பெயரில் ஒரு சுதந்திர நாட்டா‌ய் மா‌றியது.
Similar questions