Political Science, asked by parmjeetkaurgng3431, 10 months ago

தனிநபர் முன்வரைவு - வரையறுக்கவும்

Answers

Answered by anjalin
0

அமைச்சர் அல்லாத உறுப்பினர்கள் தாக்கல் செய்யும் சட்ட முன்வரைவு தனிநபர் முன்வரைவு என்று அழைக்கப்படுகிறது.

விளக்கம்:

  • நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகளைச் சேர்ந்த எவரும் தனிநபர் சட்டமுன்வரைவு கொண்டு வரலாம். தனிநபர் சட்டமுன்வரைவு என்பது அமைச்சரவையிலோ நிர்வாகத்திலோ உறுப்பினராக இல்லாதநாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் முன்மொழியப்படுவது ஆகும்.
  • தனிநபர் சட்டமுன்வரைவு மீதான விவாதம் அடுத்தடுத்த வாரத்தின் வெள்ளிக் கிழமைகளில் பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை நடைபெறும்.இந்த சட்ட முன்வரைவு கொண்டு வர ஒரு மாதத்திற்கு முன்பாகவே முன்அறிவிப்பு தரவேண்டும்.  
  • தனிநபர் முன்வரைவுகள் நிராகரிக்கப்பட்டாலும் அது ஆட்சியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதுவரை நாடாளுமன்றத்தில் 14 தனிநபர் சட்டமுன்வரைவு மட்டுமேநிறைவேற்றப்பட்டுள்ளன. கடைசியாக, தனிநபர் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1970.
  • இவ்வாறு கொண்டு வரப்படும் தனிநபர் முன்வரைவுகளில் பெரும்பாலானவை வாசிக்கப்படுவதோ, விவாதிக்கப்படுவதோ, நிராகரிக்கப்படுவதோகூட கிடையாது. அரசமைப்பு திருத்தம் கோரும் முன்வரைவுகள் கூட தனிநபர்முன்வரைவுகளாக ஏற்கப்படலாம். ஆனால் நிதி முன்வரைவுகளை தனிநபர் சட்டமுன்வரைவாக கொண்டு வர முடியாது.

Similar questions