திருத்தச்சட்டகளின் வகைகளை எழுதுக.
Answers
Answered by
0
உறுப்பு 368, இரண்டு வகையான சட்ட திருத்தச்சட்டங்களுக்கு வழிவகை செய்கிறது.
விளக்கம்:
நாடாளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை மற்றும் 50% மாநிலங்கள் தனி பெரும்பான்மை மூலம் திருத்தச்சட்டங்கள் மேற்கொள்ளலாம். ஆனால் வேறு சில உறுப்புகள் அரசமைப்பில் உள்ள சில வகைமுறைகளில் திருத்தச்சட்டம் மேற்கொள்ள நாடாளுமன்றத்தின் தனிப்பெரும்பான்மை மட்டுமே தேவை. அதாவது அது சட்டம்இயற்றல் நடவடிக்கையைப் போன்றே தனித்தனியாக ஒவ்வொரு சபையிலும், வருகை புரிந்து வாக்கு அளிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பெரும்பான்மை தேவை. எனவே அரசமைப்ப திருத்தச்சட்டங்களை மூன்று வழிகளில் மேற்கொள்ளலாம்:
• நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை
• நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை,
• நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை மற்றும் சரி பாதி மாநிலச் சட்டமன்றங்களால் ஏற்புறுதி செய்யப்படுவது.
Similar questions