பூமியில் முதல் உயிரினங்கள் தோன்றியது.
௮) காற்றில்
அ) நிலத்தில்
இ) நீரில் ஈ) மலைப்பகுதியில்
Answers
Answer:
உயிரினங்களின் பரிணாம வரலாறு எனப்படும். புவி தோன்றி 1 பில்லியன் ஆண்டுகளுக்குள் உயிரினங்கள் தோற்றம் பெற்றன. தற்போதுள்ள உயிரினங்களுக்கிடையே உள்ள அமைப்பொற்றுமை ஒரு பொது மூதாதையர் அனைத்து உயிரினங்களுக்கும் உள்ளதை உறுதிப்படுத்துகின்றது. புவியில் முதலில் தோன்றிய உயிரினமாக நுண்ணுயிரி வகையொன்றே கருதப்படுகின்றது. முதல் உயிரியானது வேதியியல் தாக்கங்களின் விளைவால் நீரினடியில் உருவாகியவையாகும். இதற்கான சூழல் தரையில் இல்லாமையால் ஆழமான நீரே இதற்குப் பொருத்தமான ஊடகமாக விளங்கியது. இவ்வகை வேதியல் தாக்கங்களுக்கான சக்தி கடலடி எரிமலைகளாலும், புற ஊதாக் கதிர்களாலும், மின்னலாலும் வளங்கப்பட்டது.
தற்போசணை நுண்ணுயிரிகள் கிட்டத்தட்ட 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றின. இவை தற்போதைய சயனோபாக்டீரியாக்களைப் பெரிதும் ஒத்திருக்கின்றன. இவற்றினால் ஆக்சிசன் வாயு புவியின் வளிமண்டலத்தில் தோன்ற ஆரம்பித்தது. அதுவரையும் கரியமிலவாயு, நீராவி, அமோனியா, ஐதரசன் போன்ற வாயுக்களே புவியின் வளிமண்டலத்தில் காணப்பட்டன. இதன் காரணமாக ஓசோன் வாயு உருவாகி நீரிலிருந்து நிலத்துக்கு உயிரினங்கள் பரவலடைவது சாத்தியமாகியது. ஓசோன் வாயு இல்லாவிடில் நிலமும் ஆழமற்ற கடற்பிரதேசங்களும் உயிரினங்களுக்கு ஆபத்தான புற ஊதாக் கதிர்கள் தாக்கும். இதன் காரணமாக தற்போசணை நுண்ணுயிரிகளிலிருந்தும் ஏனைய பாக்டீரியாக்களிலிருந்தும் 1.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பரிணாமித்து வந்த மெய்க்கருவுயிரிகளான தாவரங்கள் மற்றும் விலங்குகள் நீரிலிருந்து நிலத்தை ஆக்கிரமித்தன.
மிகப்பழமையான நிலத்தாவரங்கள் 450 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்டவையாகும். 525 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கேம்பிரியன் காலத்தில் முள்ளந்தண்டுளிகள் தோற்றம் பெற்றன. ஜுரஸிக் மற்றும் கிரேடீசியஸ் காலத்தில் ஊர்வன வகையைச் சார்ந்த தொன்மாக்கள் ஆதிக்கம் செலுத்தின. அப்போது தோற்றம் பெற்ற முலையூட்டிகள் சிறிய பூச்சியுண்ணிகளாகவே இருந்தமையால் அக்காலம் ஊர்வனவற்றின் காலம் என அழைக்கப்படுகின்றது. 65 மில்லியன் வருடங்களுக்கு முன்பு விண்கல் ஒன்று மோதியமையால் பறக்கமுடியாத தொன்மாக்கள் உட்பட பல உயிரினங்கள் அழிந்து போயின. இயற்கைத் தேர்வினால் அவ்வழிவிற்குப் பிற்பட்ட சூழலானது பறவைகளுக்கும் முலையூட்டிகளுக்கும் சாதகமாக அமைந்தது.
சுவட்டு ஆதாரங்களின் படி பூக்கும் தாவரங்கள் 130 தொடக்கம் 90 மில்லியன் வருடங்களுக்கு முன்பு தோற்றம் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இவற்றின் மகரந்தச் சேர்க்கைக்கு பூச்சிகள் தேவைப்பட்டமையால் அதே காலத்தின் தேனிக்கள் போன்ற சமூகப் பூச்சிகளும் பரிணாம வளர்ச்சி பெற்றன. இருகால்களில் நடக்கும் வாலில்லாக் குரங்குகளில் இருந்து 6 மில்லியன் வருடங்களுக்கு முன்பு மனித இனம் தோற்றம் பெற்றது. பழங்கால மனித இனங்களுக்கு சிம்பன்சி அளவான மூளையே காணப்பட்டாலும் 3 மில்லியன் வருடங்களுக்கு முன்பிலிருந்து மனித மூளையின் அளவு படிப்படியாக வளர்ச்சியடைந்துள்ளது.
இ) நீரில்
விளக்கம்:
- புவியில் உள்ள உயிர்கள் கார்பன் மற்றும் நீரின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஆக்ஸோஜெனிக் ஒளிச்சேர்க்கையின் மூலம் ஒடுக்கும் வினைப்பொருள் நீராகும். இது, முந்தைய ஆக்ஸோஜெனிக் ஒளிச்சேர்க்கைக்குத் தேவைப்படும் புவி உற்பத்தி செய்யும் ஒடுக்கும் முகவர்களைவிட மிகவும் அதிக அளவில் உள்ளது. இந்த நிலையிலிருந்து பார்த்தால், வாழ்க்கை என்பது புவிவேதியியல் செயல்முறைகளைவிட அவசியமான வளங்களில் அதிக அளவு உற்பத்தி செய்தது. ஆக்சிஜன், அதற்கு தகவமைந்திராத உயிரினங்களுக்கு நச்சுத்தன்மையைக் கொண்டுள்ளது, ஆனால் ஆக்ஸிஜன் ஏற்ற உயிரிகளின் வளர்சிதை மாற்றத் திறனை பெருமளவு அதிகரிக்கிறது.
- நீர் ஒரு சிறந்த கரைப்பான் உள்ளது மற்றும் இரண்டு பயனுள்ள பண்புகள் கொண்டுள்ளது: பனி மிதக்கிறது குளிர் காலத்தில் அதன் அடியில் உயிர் உயிரினங்கள் வாழ உதவுகிறது என்று உண்மை; மற்றும் அதன் மூலக்கூறுகள் மின் எதிர்மறை மற்றும் நேர்மறை முனைகளை கொண்டுள்ளன. இது மற்ற கரைப்பான்கள் விட பல சேர்மங்களை உருவாக்க உதவுகிறது. அம்மோனியா போன்ற மற்ற நல்ல கரைப்பான்கள், போன்ற குறைந்த வெப்பநிலையில் திரவ போன்ற இரசாயன எதிர்வினைகள் மிகவும் மெதுவாக வாழ்க்கை நிலைத்திருக்கவும், மற்றும் தண்ணீர் மற்ற நன்மைகள் இல்லை. மாற்று உயிரி வேதியியலின் அடிப்படையிலான உயிரினங்கள் மற்ற கோள்களில் சாத்தியமாகலாம்.