கீழ்க்காணும் அட்டவணையை நிறைவு செய்.
Attachments:
Answers
Answered by
0
புட்டாளம்மை
- பொன்னுக்கு வீங்கி என பொதுவாக அழைக்கப்படும் நோயான புட்டாளம்மை ஆனது மம்ப்ஸ் வைரஸ் காரணமாக உருவாகிறது.
- நமது உடலில் உமிழ்நீர் சுரப்பி உள்ள பகுதியில் புட்டாளம்மையின் நோய் தொற்று ஏற்படும்.
- புட்டாளம்மை வைரஸின் அடைகாக்கும் காலம் 11 முதல் 22 நாட்கள் ஆகும்.
சின்னம்மை
- சின்னம்மை நோய் ஆனது வேரிசெல்லா ஸோஸ்டர் வைரஸின் காரணமாக உருவாகிறது.
- நமது உடலில் சுவாசப் பாதை, தோல் மற்றும் நரம்பு மண்டலம் முதலியன சின்னம்மை நோய் தொற்று ஏற்படும் பகுதி ஆகும்.
- சின்னம்மை வைரசின் அடை காக்கும் காலம் 21 நாட்கள் ஆகும்.
டெங்கு காய்ச்சல்
- டெங்கு காய்ச்சலின் நோய்க்காரணி டெங்கு வைரஸ் (அ) ஃபிளேவி வைரஸ் ஆகும்.
- நமது உடலில் டெங்கு காய்ச்சலின் நோய் தொற்று ஏற்படும் பகுதி தோல் மற்றும் இரத்தம் ஆகும்.
- டெங்கு வைரசின் அடைகாக்கும் காலம் 3 முதல் 14 நாட்கள் ஆகும்.
Similar questions