மனித கண் ஒலை செய்யும் கண்ணின் அண்மைப்புள்ளி மற்றும் சேய்மைப்புள்ளி குறித்து எழுதுக?
Answers
Answered by
3
Answer:
hey mate
மனித கண் ஒலை செய்யும் கண்ணின் அண்மைப்புள்ளி மற்றும் சேய்மைப்புள்ளி குறித்து எழுதுக?
translate in English
Answered by
0
மனிதக் கண் வேலை செய்யும் விதம்:
- கண்ணில் உள்ள ஒளி புகும் படலமான கார்னியா தன் மீது படும் ஒளிக்கதிர்களை, ஐரிஸின் மையப்பகுதியில் உள்ள கண்பாவையை நோக்கி திருப்புகிறது.
- இக்கதிர்கள் விழிலென்சை அடைகின்றன.
- விழிலென்சானது குவி லென்சாக செயல்படுவதால், இக்கதிர்கள் குவிக்கப்பட்டு விழித்திரையில் தலைகீழாக, மெய்ப்பிம்பம் தோற்றுவிக்கப்படுகிறது.
- இப்பிம்பம் பார்வை நரம்புகள் மூலம் மூளைக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதியாக மூளையானது நேரான பிம்பத்தை உணர்கிறது.
கண்ணின் அண்மைப்புள்ளி மற்றும் சேய்மைப்புள்ளி:
- மனிதக் கண் ஒன்றினால் தன் எதிரில் உள்ளப் பொருள்களைத் தெளிவாகக் காணக்கூடிய மிகச்சிறியத் தொலைவு தெளிவுறு காட்சியின் மீச்சிறுத் தொலைவு ஆகும்.
- இது அண்மைப்புள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. இது மனிதக் கண்ணிற்கு பொதுவாக- 25செ.மீ என்ற அளவில் இருக்கும்.
- கண் ஒன்றினால் ,எவ்வளவு தொலைவில் உள்ள பொருள்களைத் தெளிவாகக் காண முடிகிறதோ, அப்புள்ளி சேய்மைப்புள்ளி என்று அழைக்கப்படுகிறது.
- பொதுவாக, சேய்மை புள்ளியானது ஈறிலாத் தொலைவில் அமைந்திருக்கும்.
Similar questions