India Languages, asked by anushkakumar4784, 1 year ago

) மின்னோட்டம் என்றால் என்ன? மின்னோட்டத்இன் அலகை வரையறு.) மின்னோட்டத்தை எந்த கருவியின் மூலம்
அளவிடமுடியும்? அதனை ஒரு மின்சுற்றில்
எவ்வாறு இணைக்கப்பட வேண்டும்?

Answers

Answered by steffiaspinno
2

மின்னோட்டம் :

  • மின்னோட்டம் என்பது ஓரலகு நேரத்தில் கடத்தியின் ஒரு குறுக்கு வெட்டுப் பகுதியை கடந்து செல்லும் மின்னூட்டங்களின் அளவு மின்னோட்டமாகும்.

               I = Qt

மின்னோட்டத்தின்  அலகு:

  • மின்னோட்டத்தின்  அலகு ஆம்பியர் ஆகும் . மின்னூட்டத்தின் அலகு கூலும் ஆகும்.

ஆம்பியர் :

  • ஒரு ஆம்பியர் என்பது ஒரு கூலும் மின்னூட்டமானது ஒரு விநாடி நேரத்தில் கடத்தியின் ஏதாவது ஒரு குறுக்குவெட்டுப் பரப்பு வழியாக கடந்து செல்லும் போது அக்கடத்தியில் பாயும் மின்னோட்டத்தின் அளவாகும்.
  • 1 ஆம்பியர் = 1 கூலும்  / 1 விநாடி
  • இந்த மின்னோட்டத்தை அளவிட பயன்படும் கருவி அம்மீட்டர் ஆகும்.
  • ஒரு மின்சுற்றில் தொடரிணைப்பில்  இணைக்கப்பட வேண்டும் .  
Similar questions