India Languages, asked by smartadeeb9812, 8 months ago

அணுக்கரு உலை என்றால் என்ன? அதன் இன்றியமையாத பாகங்களின் செயல்பாடுகளை

Answers

Answered by ritu16829
0

Answer:

hey mate ❤️ ❤️

plz post ur question in English or hindi as this language is not understandable to me

hope u understand

Answered by steffiaspinno
1

அணுக்கரு உலை:

  • அணுக்கரு உலை என்பது முழுவதும் தற்சார்புடைய கட்டுப்படுத்தப்பட்ட அணுக்கரு வினை நடைபெற்று உற்பத்தி செய்யும் இடமாகும்.  
  • அணுக்கரு உலையின் இன்றியமையாத பாகங்கள் ,
  1. எரிபொருள்  
  2. தணிப்பான்
  3. கட்டுப்படுத்தும் கழி
  4. குளிர்விப்பான்  
  5. தடுப்புச்சுவர்

எரிபொருள்:

  • பிளவுபடும் பொருளை எரிபொருள் ஆகும். எடுத்துக்காட்டு யுரேனியம்  

தணிப்பான்:

  • தணிப்பான் உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரான்களை குறைந்த ஆற்றல் கொண்ட நியூட்ரான்களாக குறைப்பதற்கு தணிப்பான் பயன்படுகிறது. எடுத்துக்காட்டு  கிராஃபைட்,  

கட்டுப்படுத்தும் கழி:

  • தொடர் வினையை நிலைநிறுத்தி நியூட்ரான்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்துவது கட்டுப்படுத்தும் கழி ஆகும்.
  • நியூட்ரான்களை உட்கவரும் திறன் பெற்றவை.  எடுத்துக்காட்டு காட்மியம் கழிகள்.

குளிர்விப்பான்:

  • அணுக்கரு உலையில் உருவாகும் வெப்பத்தை நீக்குவதற்காக குளிர்விப்பான் பயன்படுகிறது.
  • இதில் உருவாகும் நீராவியை கொண்டு விசையை இயக்கி  மின் உற்பத்தி செய்ய பயன்படுகிறது. எடுத்துக்காட்டு, நீர்,  காற்று , ஹீலியம்.

தடுப்புச்சுவர்:

  • அபாயகரமான கதிர்வீச்சு சுற்றுப்புற சூழலில் பரவாமல் தடுத்து பாதுகாப்பதற்காக தடிமனான காரியத்தினால் அணுஉலையை சுற்றி கட்டுப்படுத்தப்படுகிறது.
Similar questions