India Languages, asked by Pawanruhela57721, 11 months ago

. காற்று சுவாசிகள் செல்சுவாசத்தின் போது
எவ்வாறு குளுக்கோஸிலிருந்து ஆற்றலைப்
பெறுகின்றன? அதற்கான மூன்று படிநிலைகளை
எழுதி விவரிக்கவும்.

Answers

Answered by steffiaspinno
5

காற்று சுவாசத்தின் மூன்று படிநிலைகளை ;  

  1. குளுக்கோஸ் பிளப்பு  
  2. காற்று சுவாசத்தின் படிநிலைகள்
  3. எலக்ட்ரான் கடத்தும் சங்கிலி அமைப்பு

குளுக்கோஸ் பிளப்பு:    

  • குளுக்கோஸ் அமைப்பு இது ஒரு மூலக்கூறு குளுக்கோஸ் ஆனது 6 கார்பன் இரண்டு மூலக்கூறு பைருவிக் அமிலம் ஆக விளக்கப்படும் நிகழ்ச்சியாகும் சைட்டோபிளாசம் நடைபெறுகிறது:  
  • இந்த நிகழ்ச்சியானது காற்று மற்றும் காற்றில்லா சுவாசம் இரண்டிற்கும் பொதுவானது ஆகும்.

கிரப்ஸ் சுழற்சி:

  • இந்நிகழ்ச்சி மைட்டோகாண்ட்ரியா வின் உட்புறத்தில் நடைபெறுகிறது.
  • நிகழ்ச்சியின் முடிவில் உண்டான இரண்டு மூலக்கூறு பைருவிக் அமிலம் முழுவதும் ஆக்ஸிகரணம் அடைந்து கார்பன்டை ஆக்சைடு மற்றும் நீராவி அழற்சி என்று பெயர்.

எலக்ட்ரான் கடத்தும் சங்கிலி அமைப்பு:  

  • மைட்டோகாண்ட்ரியா உட்புற சங்கிலி என்ற எலக்ட்ரான்களை கடத்தும் அமைப்பு உள்ளது.
  • நிகழ்ச்சியின் போது வெளியான ஆற்றல் ஏடிபி எடுத்துக் கொள்ளப்பட்டு ஏடிபி உருவாகிறது.
  • இதற்கு காரணம் பாஸ்போர்ட் தீர்ப்பு என்று அழைக்கப்படுகிறது.
  • நிகழ்ச்சியின் போது வெளியேற்றப்பட்ட எலக்ட்ரான்களை எடுத்துக்கொண்டு நீராக ஓடுக்கப்படுகிறது.
Answered by aadhithan13
0

Answer:

அ. கிளைக்காலிஸிஸ் (குளுக்கோஸ் பிளப்பு):

இது ஒரு மூலக்கூறு குளுக்கோஸானது (6 கார்பன்) இரண்டு மூலக்கூறு பைருவிக் அமிலமாக (3 கார்பன்) பிளக்கப்படும் நிகழ்ச்சியாகும்.

இது சைட்டோபிளாசத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியானது காற்று மற்றும் காற்றில்லா சுவாசம் இரண்டிற்கும் பொதுவானதாகும்.

ஆ. கிரப்சுழற்சி:

இந்நிகழ்ச்சி மைட்டோகாண்ட்ரியாவின் உட்கூழ்மத்தில் நடைபெறுகிறது (உட்கூழ்மம் – matrix) கிளைக்காலிஸிஸ் நிகழ்ச்சியின் முடிவில் உண்டான இரண்டு மூலக்கூறு பைருவிக் அமிலம் முழுவதும் ஆக்ஸிகரணம் அடைந்து கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் நீராக மாறும் இந்த சுழற்சிக்கு கிரப் சுழற்சி அல்லது ட்ரை கார்பாக்ஸிலிக் அமில சுழற்சி (TCA சுழற்சி) என்று பெயர்.

இ. எலக்ட்ரான் கடத்தும் சங்கிலி அமைப்பு:

மைட்டோகாண்ட்ரியாவின் உட்புறச்சவ்வில் எலக்ட்ரான் கடத்து சங்கிலி என்ற எலக்ட்ரான்களை கடத்தும் அமைப்பு உள்ளது. கிளைக்காலிஸிஸ் மற்றும் கிரப் சுழற்சியின் போது உண்டான NADH2 மற்றும் FADH2வில் உள்ள ஆற்றலானது இங்கு வெளியேற்றப்பட்டு அவை NAD+ மற்றும் FAD+ ஆக ஆக்ஸிகரணம் அடைகின்றன. இந்நிகழ்ச்சியின் போது வெளியான ஆற்றல் ADP-யால் எடுத்துக் கொள்ளப்பட்டு ATP ஆக உருவாகிறது. இதற்கு ஆக்ஸிகரண பாஸ்பேட் சேர்ப்பு என்று அழைக்கப்படும். இந் நிகழ்க்சியின் போது வெளியேற்றப்பட்ட எலக்ட்ரானை ஆக்ஸிஜன் எடுத்துக்கொண்டு நீராக (H2O) ஒடுக்கமடைகிறது.

Similar questions