ராக்கெட் ஏவுதலில் _______________ விதி/கள்
பயன்படுத்தப்படுகிறது.
அ) நியூட்டனின் மூன்றாம் விதி
ஆ) நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி
இ) நேர் கோட்டு உந்த மாறாக் கோட்பாடு
ஈ) அ மற்றும் இ
Answers
Answered by
4
அ மற்றும் இ
ராக்கெட் ஏவுதல்
- நியூட்டனின் மூன்றாம் விதி மற்றும் நேர் கோட்டு உந்த மாறாக் கோட்பாடு (நேர் கோட்டு உந்த அழிவின்மை விதி) ஆகிய இரண்டு விதிகள் ராக்கெட் ஏவுதலில் பயன்படுகிறது.
- திட அல்லது திரவ எரி பொருட்கள் ராக்கெட்டுகளின் உந்து கலனில் நிரப்பப்படுகிறது.
- எரி பொருட்களை எரிக்கும் போது, வெப்ப வாயுக்கள் அதிக திசை வேகத்துடன் ராக்கெட்டின் வால் பகுதியின் வழியே வெளியேறுகிறது.
- இதனால் அதிக உந்தம் உருவாகிறது.
- இந்த உந்தத்தினை சமன் செய்ய, அதற்கு சமமான எதிர் உந்து விசை எரி கூடத்தில் உருவாகும்.
- இதனால் ராக்கெட் அதிக வேகத்துடன் முன்னோக்கி பாயுகிறது.
Similar questions