ஒளிவிலகல் எண் என்றால் என்ன?
Answers
Answered by
12
ஒளி விலகல் எண்
- ஒளி விலகல் என்பது ஒளிக் கதிர் தன் பாதையில் இருந்து விலகி செல்லும் நிகழ்வு ஆகும்.
- காற்று அல்லது வெற்றிடம் ஆகிய இரண்டில் உள்ள ஒளியின் திசைவேகம் மற்றும் வேறொரு ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தகவு ஒளி விலகல் எண் என அழைக்கப்படுகிறது.
- ஒளியின் திசைவேகம் ஆனது ஒளி விலகல் எண் அதிகமாக உள்ள ஊடகங்களில் குறைவாக இருக்கும்.
- அதே போல ஒளியின் திசை வேகம் ஆனது ஒளி விலகல் எண் குறைவாக உள்ள ஊடகங்களில் அதிகமாக இருக்கும்.
- ஒளி விலகல் எண் ஆனது ஒரு ஊடகத்தில் ஒளிக் கதிரின் திசை வேகம் எவ்வாறு இருக்கும் என்பதை கூறுகிறது.
Similar questions