நீள் வெப்ப விரிவு மற்றும் பரப்பு வெப்ப விரிவு
– வேறுபடுத்துக
Answers
Answered by
5
நீள் வெப்ப விரிவு மற்றும் பரப்பு வெப்ப விரிவு இடையே உள்ள வேறுபாடு
நீள் வெப்ப விரிவு
- நீள் வெப்ப விரிவு என்பது ஒரு திடப் பொருளை சூடுப்படுத்துவதன் விளைவாக அந்த பொருளின் நீளம் அதிகரிப்பதால் ஏற்படும் விரிவு ஆகும்.
- நீள் வெப்ப விரிவு குணகம் என்பது ஓரலகு வெப்பநிலை உயர்வினால் பொருளின் நீளத்தில் ஏற்படும் மாற்றம் மற்றும் ஓரலகு நீளம் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தகவு ஆகும்.
பரப்பு வெப்ப விரிவு
- பரப்பு வெப்ப விரிவு என்பது ஒரு திடப் பொருளை சூடுப்படுத்துவதன் விளைவாக அந்த பொருளின் பரப்பு அதிகரிப்பதால் ஏற்படும் விரிவு ஆகும்.
- பரப்பு வெப்ப விரிவு குணகம் என்பது ஓரலகு வெப்பநிலை உயர்வினால் பொருளின் பரப்பில் ஏற்படும் மாற்றம் மற்றும் ஓரலகு பரப்பு ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தகவு ஆகும்.
Anonymous:
Awesome Explained
Similar questions