ஒலியானது கோடை காலங்களை விட மழைக்
காலங்களில் வேகமாகப் பரவுவது ஏன்?
Answers
Answered by
2
Answer:
மழை நாட்களில், ஈரப்பதம் வளிமண்டலத்தில் அதிகமாக இருக்கும் மற்றும் ஈரப்பதம் அதிகரிப்பதன் மூலம் ஒலியின் வேகம் அல்லது வேகம் அதிகரிக்கிறது.
எனவே மழை நாட்களில் ஒலி வேகமாக பயணிக்கிறது.
Answered by
1
ஒலி ஆனது கோடை காலங்களை விட மழைக் காலங்களில் வேகமாகப் பரவ காரணம்
- அலை வடிவில் உருவாகும் ஒலி ஆற்றலே ஒலி அலை என அழைக்கப்படுகிறது.
- ஒலி அலையின் திசைவேகம் என்பது ஒரு ஊடகத்தின் வழியே அலை பரவும் திசைவேகம் என அழைக்கப்படுகிறது.
- ஒரு வினாடி காலத்தில், ஒலி அலைகள் ஊடகத்தில் பரவிய தொலைவே ஒலியின் திசைவேகம் ஆகும்.
- ஒலியின் திசைவேகத்தினை வெப்பநிலையின் அளவு, அடர்த்தியின் அளவு மற்றும் ஒப்புமை ஈரப்பதத்தின் அளவு முதலியன பாதிக்கின்றன.
- காற்றில் ஈரப்பதன் அதிகரிக்கும் போது ஒலியின் திசை வேகம் அதிகரிக்கிறது.
- இதனால் தான் ஒலி ஆனது கோடை காலங்களை விட மழைக் காலங்களில் வேகமாகப் பரவுகிறது.
Similar questions