India Languages, asked by bharath2543, 1 year ago

எந்த அமிலம், அலுமினிய உலோகத்தை செயல்படா நிலைக்கு உட்படுத்தும். ஏன்?

Answers

Answered by steffiaspinno
11

அ‌லு‌மி‌னிய‌‌‌ம்

  • நமது  பூமியில் மிகச் செறிந்து காணப்படும் உலோகம் அலுமினியம் ஆகும்.  
  • மேலும் அலுமினியத்தின் வினைபடும் திறன் அதிகம்.
  • அதனால் இது மற்ற தனிமங்களுடன் சேர்ந்த நிலையில்  காணப்படும்.
  • இதில் ஒரு சில முக்கியத் தாதுக்கள் காணப்படுகின்றன.
  • அலுமினியத்தின் முக்கியத் தாது பாக்சைட் ஆகும்.
  • இத்தாதுவிலிருந்து அலுமினியம் பிரித்தெடுத்தல் 2 நிலைகளில் நடைபெறுகின்றது.
  • அ‌தி‌ல் ஒ‌ன்று பாக்சைட்டை அலுமினாவாக மாற்றம் செய்தல் பேயர் முறை ஆகு‌ம்.
  • மற்றொன்று  அலுமினாவை, மின்னாற்பகுத்தல் மூலம் ஒடுக்கம் செய்தல் ஹால் முறை ஆகும்.

அலு‌மி‌னிய‌த்‌தினை செய‌ல்படா ‌நிலை‌க்கு உ‌ட்படு‌த்து‌ம் அ‌மில‌ம்

  • நீர்த்த மற்றும் அடர் நைட்ரிக் அமிலம் அலுமினிய உலோகத்துடன் வினைபுரியாது.
  • இதனால் அலுமினியம் செயல்படாத நிலைக்கு உட்படுத்தப்படுகிறது.
  • அ‌லு‌மி‌னிய‌த்‌தி‌ன் மே‌ல் பரப்பில் உருவாகும் ஆக்சைடு படலமே இதற்கு காரணம் ஆகும்.
  • இந்த ஆக்ஸைடு படலம் உருவானதால் அலு‌மி‌னிய‌த்‌தி‌ன் வினைபடும் திறன் குறை‌கிறது.
Similar questions