பின்வருவனவற்றில் என்ன நடைபெறும் என எதிர்பார்க்கிறாய்?
அ. ஜிப்ரல்லினை நெல் நாற்றுகளில் தெளித்தால்
ஆ. அழுகிய பழம் பழுக்காத பழத்துடன் சேர்த்து வைக்கப்பட்டால்
இ. வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனின் சேர்க்ப்படாத போது
Answers
Answered by
0
ஜிப்ரல்லினை நெல் நாற்றுகளில் தெளித்தால்
- கணுவிடைப் பகுதிகளில் நீட்சியினை தூண்டக்கூடிய தாவர ஹார்மோன் ஜிப்ரல்லின் ஆகும்.
- நெல் நாற்றுகளில் ஜிப்ரல்லினை தெளிக்கும் போது கணுவிடைப் பகுதியின் அசாதாரண நீட்சியைத் தூண்டும்.
அழுகிய பழம் பழுக்காத பழத்துடன் சேர்த்து வைக்கப்பட்டால்
- வாயு நிலையில் உள்ள ஹார்மோன் எத்திலின் ஆகும்.
- அழுகிய பழம் பழுக்காத பழத்துடன் சேர்த்து வைக்கப்படும் போது, பழுத்து அழுகிய பழத்திலிருந்து எத்திலின் வாயு உருவாகும்.
- இந்த எத்திலின் வாயு ஆனது பழுக்காத பழங்களை விரைவாக பழுக்கச் செய்யும்.
வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனின் சேர்க்கப்படாத போது
- தாவரங்களில் செல் பகுப்பினை ஊக்குவிக்கும் ஹார்மோன் சைட்டோகைனின் ஆகும்.
- வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனின் சேர்க்கப்படாத போது செல் பகுப்பு, செல்களின் வளர்ச்சி, புதிய உறுப்புகள் தோன்றுதல் முதலியன நிகழாது.
Answered by
0
Answer:
அ. ஜிப்ரல்லினை நெல் நாற்றுகளில் தெளித்தல்.
Similar questions