மெண்டல் தன் ஆய்விற்கு ஏன் தோட்டப் பட்டாணிச் செடியைத் தேர்ந்தெடுத்தார்?
Answers
Answer:
கிரிகோர் யோவான் மெண்டல் (Gregor Johann Mendel, சூலை 20, 1822 – சனவரி 6, 1884), மரபியல் குறித்த அடிப்படை ஆய்வுப் பணிகளுக்காக அறியப்படும் ஆத்திரிய நாட்டைச் சேர்ந்த ஒரு அகத்தீனிய அவைத் துறவி. இவரை மரபியலின் தந்தை என்று அழைக்கிறார்கள்.
Explanation:
மெண்டல், தனது ஆர்வத்தின் காரணமாக தனிப்பட்ட முறையில் ஆய்வு மேற்கொண்டார். தன் தோட்டத்தில் இருந்த பட்டாணிச் செடிகளில், முறைப்படுத்தப்பட்ட மகரந்தச் சேர்க்கை நடைபெறச் செய்தார். அதன் விளைவுகளை புள்ளியியல் அடிப்படையில் விளங்கிக்கொள்ள முற்பட்டபோது, மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டே ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு எப்படி கடத்தப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தார். பிற்காலத்தில், இவ்விதிகள் மெண்டலின் விதிகள் எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டன. 1866ல் இது குறித்த ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றினை எழுதினார். எனினும், இக்கட்டுரையின் முக்கியத்துவத்தை, அவர் வாழ்நாளில் எவரும் உணரவும் இல்லை; ஏற்கவும் இல்லை. 1900ல் Correns, De Vries, Tschermak என்ற மூன்று தனிப்பட்ட ஆய்வாளர்கள் மெண்டல் எழுதிய கட்டுரையின் முக்கியத்துவத்தை உணர்ந்தனர். இன்று, மெண்டல் வரையறுத்த கோட்பாடுகள் மரபியலின் அடிப்படையாக விளங்குகின்றன.
PLEASE MARK ME AS BRAINLIEST and LIKE ME PLEASE
மெண்டல் தன் ஆய்விற்கு தோட்டப் பட்டாணிச் செடியைத் தேர்ந்தெடுத்ததன் காரணம்
- தோட்டப் பட்டாணிச் செடியில் இயற்கையாகவே தன் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.
- இதனால் தூய தாவரங்களைப் பெருக்கம் செய்வது எளிதாக இருக்கும்.
- தோட்டாப் பட்டாணிச் செடி ஆனது ஓராண்டு தாவரம் ஆகும்.
- இதன் வாழ்க்கைக் காலம் மிகக் குறுகியதாக உள்ளதால் குறுகிய காலத்தில் பல தலைமுறைகளை விரைவில் அறிந்து கொள்ள முடியும்.
- அயல் மகரந்தச் சேர்க்கையை தோட்டப் பட்டாணிச் செடியில் மிகவும் எளிமையாக நடத்த இயலும்.
- ஆழமாக வரையறுக்கப்பட்ட பல வேறுபட்ட பண்புகள் தோட்டப் பட்டாணிச் செடியில் காணப்படுகிறது.
- தோட்டப் பட்டாணிச் செடியில் இரு பால் தன்மை கொண்ட மலர்கள் உள்ளன.
- தோட்டப் பட்டாணிச் செடியில் மேற்கண்ட பண்புகள் இருப்பதால் மெண்டல் தன் ஆய்விற்கு பயன்படுத்தினார்.