மரங்கள் வெட்டப்படுவதால் உண்டாகும்
விளைவுகள் யாவை?
Answers
மரங்கள் வெட்டப்படுவதால் உண்டாகும் விளைவுகள்
காடுகள்
- அடர்ந்த மரங்கள், புதர்கள், சிறு செடிகள், கொடிகள் முதலியனவற்றை கொண்ட பல்வேறு தாவர மற்றும் விலங்கு இனங்களின் வாழிடமாக விளங்கக்கூடியதே காடுகள் ஆகும்.
- காடுகள் நம் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
- பெருகி வரும் மக்கள், நகரமயமாதல் முதலியன காரணங்களால் காடுகள் அழிக்கப்படுகின்றன.
மரங்கள் வெட்டப்படுவதால் உண்டாகும் விளைவுகள்
- மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் அழிக்கப்படுவதால் பெரு வெள்ளம், வறட்சி, மண்ணரிப்பு, வன உயிரிகள் அழிப்பு முதலியன ஏற்படுகின்றன.
- மேலும் பருவ நிலைகளில் மாற்றம், பாலைவனமாதல், உலக வெப்ப மயமாதல், பனிப் பாறைகள் உருகுதல், கடல் நீர் மட்டம் அதிகரித்தல், உயிர்புவி சுழற்சியில் சமமற்ற நிலை முதலிய சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும்.
காட்டு நிலங்களை, வேளாண்மை, நகராக்கம் போன்ற காடல்லாத நிலப் பயன்பாடுகளுக்கோ அல்லது அதன் வளங்களுக்காகக் காட்டை வெட்டி நிலத்தைத் தரிசாகவோ மாற்றுவதே காடழிப்பு என்பதன் முழுமையான பொருளாகும். முற்காலத்தில் காடழிப்பு, மேய்ச்சல் நிலங்களை உருவாக்குவதற்கு அல்லது வேளாண்மை நிலங்களை உருவாக்கும் நோக்கத்துடனேயே நடைபெற்றது. தொழிற் புரட்சிக்குப் பின்னர் நகராக்கமும், காட்டு வளங்களின் சுரண்டலும், இத்துடன் சேர்ந்து கொண்டன. பொதுவாக, குறிப்பிடத்தக்க பரப்பளவு கொண்ட காடுகளை அழிப்பது, உயிரியற் பல்வகைமையைக் (biodiversity) குறைத்து, சூழலையும் தரம் குறைத்து விடுகிறது. வளர்ந்துவரும் நாடுகளில் பெருமளவில் காடழிப்பு இடம்பெற்று வருகிறது. உலக மக்கள் தொகையில் 16 சதவீதம் கொண்டுள்ள ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், மற்றும் வட அமெரிக்க நாடுகள் தொழில்துறையில் பயன்படுத்துகின்ற மரப்பொருடகளில் பாதியை இவை பயன்படுத்துகின்றன.[1] இது புவியியல் மற்றும் காலநிலை சார்ந்த தாக்கங்களை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.