. சூரிய ஆற்றல் மூலம் எவ்வாறு ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் எனப்படுகிறது?
Answers
Answered by
3
Answer:
சூரிய ஒளி மற்றும் வெப்பத்திலிருந்து நேரடியாக பெறப்படும் ஆற்றல் சூரிய ஆற்றல் (solar energy) எனப்படுகிறது. சூரிய ஆற்றல் நேரடியாக மட்டுமின்றி மறைமுகமாகவும் மற்ற மீள உருவாக்கக்கூடிய ஆற்றல்களான, காற்றாற்றல், நீர்மின்னியல், மற்றும் உயிரியல் தொகுதி (biomass) ஆகியவற்றின் உருவாக்கத்திற்கு பெருமளவில் துணை புரிகிறது. பூமியில் விழும் சூரிய ஆற்றலில் மிகவும் சிறிய பகுதியே ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்படுகிறது.
சூரிய ஆற்றலில் இருந்து மின்சாரம் இரண்டு வகைகளில் தயாரிக்கப்படுகிறது.
சூரிய ஒளியில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் (Photovoltaic).
சூரிய வெப்பத்தில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் (Solar Thermal).
Answered by
2
சூரிய ஆற்றல் மூலம் ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் என அழைக்கப்படக் காரணம்
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள்
- அதிக அளவில் கிடைக்கக் கூடிய, குறுகிய காலத்தில் தம்மை இயற்கையாகப் புதுப்பித்துக் கொள்ளக் கூடிய, மிகக் குறைந்த செலவில் ஆற்றலை தொடர்ச்சியாக தரக் கூடிய ஆற்றல் மூலங்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் என அழைக்கப்படுகிறது.
சூரிய ஆற்றல்
- சூரியனில் இருந்து பெறப்படும் ஆற்றல் சூரிய ஆற்றல் என அழைக்கப்படுகிறது.
- சூரியன் ஆனது பெருமளவு வெப்பம் மற்றும் ஒளி முதலியனவற்றினை ஆற்றலாக வெளியிடுகிறது.
- சூரிய ஆற்றல் மூலம் ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் என அழைக்கப்படுகிறது.
- இதற்கு காரணம் சூரிய ஆற்றல் ஆனது மிகக் குறுகிய காலத்தில் தம்மை இயற்கையாகப் புதுப்பிக்கக்கூடிய, குறுகிய காலத்தில் புதுப்பித்துக் கொள்ளக்கூடியதாக உள்ளது.
Similar questions